சாத்துக்குடி ஆரஞ்சு ரசம் (Sathukudi Orange rasam recipe in tamil)

Senthamarai Balasubramaniam
Senthamarai Balasubramaniam @cook_24912331

#GA4/week 12/rasam#. சாத்துக்குடியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. சில பழங்கள் புளிப்பாக இருக்கும் இந்த பழத்தை ஜூஸாக செய்தால் வீட்டில் யாரும் விரும்பி குடிக்க மாட்டார்கள்.ரசமாக செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள் உடல் நலம் இல்லாதவர்களுக்கும் இந்தரசத்தை கொடுக்கலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபர்
  1. 1 சாத்துக்குடி ஆரஞ்சு
  2. 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  3. 1 டீஸ்பூன் சீரகம்
  4. 1 டீஸ்பூன் மிளகு
  5. 3பூண்டு பற்கள்
  6. கடுகு உளுத்தம்பருப்பு சிறிதளவு
  7. பெருங்காயத்தூள் சிறிதளவு
  8. கருவேப்பிலை கொத்தமல்லி தழை சிறிதளவு
  9. உப்பு தேவையான அளவு
  10. மஞ்சள் தூள் சிறிதளவு
  11. தாளிப்பதற்கு தேவையான எண்ணெய்
  12. 1 மிளகாய்வற்றல்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    மிளகு சீரகத்தை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து பூண்டு கருவேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும் குக்கரில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி துவரம் பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    மிக்ஸியில் அரைத்ததை பருப்புத் தண்ணீருடன் கலந்து அத்துடன் உப்பு சேர்த்து கொள்ளவும்

  3. 3

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு போடவும் கடுகு பொரிந்ததும் பெருங்காயத்தூள் மிளகாய் வற்றல் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து வைத்துள்ள ரசத்தை கடாயில்ஊற்றவும். ஆரஞ்சு இரண்டாக கட் செய்து அந்த ஜூஸை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ளவும் ரசம் நுரைத்து ஒரு கொதி வந்ததும் பாத்திரத்தில் வைத்துள்ள ஆரஞ்சு ஜூஸில் ஊற்றி கொத்தமல்லி தழைகளை அதன் மேல் தூவவும் சுவையான சாத்துக்குடி ஆரஞ்சு ரசம் தயார். நீங்களும் செய்து சுவையுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Senthamarai Balasubramaniam
அன்று

Similar Recipes