பருப்பு ரசம்(PARUPPU RASAM RECIPE IN TAMIL)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

பருப்பு ரசம்(PARUPPU RASAM RECIPE IN TAMIL)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 50 கிராம் துவரம் பருப்பு
  2. 3 தக்காளி
  3. 1 ஸ்பூன் மிளகு
  4. 1டேபிள்ஸ்பூன் சீரகம்
  5. 5-7 பூண்டுப்பல்
  6. 1கைப்பிடி கொத்தமல்லி தழை
  7. 1கொத்து கறிவேப்பிலை
  8. 1 டீஸ்பூன் கடுகு, உளுந்து, சீரகம்
  9. 1டீஸ்பூன் பெருங்காயத் தூள்
  10. 1 வர மிளகாய்
  11. 1\2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. தேவையானஅளவு உப்பு
  13. 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் துவரம் பருப்பை நன்கு கழுவி பிறகு குக்கரில் துவரம் பருப்பு சேர்த்து இதில் தக்காளி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வைக்கவும். பிறகு விசில் அடங்கியதும் இப்போது பருப்பு தனியா மசித்துக் கொள்ளவும் தக்காளியை தனியாக நன்கு மசித்துக் கொள்ளவும். அடுத்தது இதை இரண்டையும் ஒன்றாக நன்கு கலந்து கொள்ளவும்.

  2. 2

    அடுத்தது கல் உரலில் சீரகம், முழு மிளகு, கொத்தமல்லி இலை,பூண்டு சேர்த்து இடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், பெருங்காயத்தூள் தாளிக்கவும். இப்போது உரலில் கலவையை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விடவும். பிறகு பருப்பு தக்காளி கரைசலை இதனுடன் ஊற்றவும். ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து

  3. 3

    நுரைத்து அதாவது கொதி வர ஆரம்பிக்கும் பொழுது கொத்தமல்லி தழையை தூவி அடுப்பை அணைக்கவும்.

    பருப்பு ரசம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes