காளான் ப்ரைடு ரைஸ் (Kaalaan fried rice recipe in tamil)

SheelaRinaldo
SheelaRinaldo @cook_27658637
Kanyakumari

காளான் ப்ரைடு ரைஸ் (Kaalaan fried rice recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3/4 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 250கி காளான்
  2. காளான் பொறிக்க மசாலா:
  3. 50கி காளான் மசாலா
  4. 2 டீஸ்பூன் மைதா
  5. 2 டீஸ்பூன் சோள மாவு
  6. 1/2 டீஸ்பூன் உப்பு
  7. 1/2எலுமிச்சை
  8. 1/2 டீஸ்பூன் வத்தல் தூள்
  9. ப்ரைடு ரைஸ் செய்ய தேவையானவை:சிறிது பட்டை,கிராம்பு,ஏலக்காய்
  10. 2 கேரட்,3 பீன்ஸ்,2 மிளகாய்
  11. 4 முட்டை
  12. 1 டீஸ்பூன் தக்காளி சாஸ்
  13. 1 டீஸ்பூன்மிளகாய் சாஸ்
  14. 1/2 டீஸ்பூன் சோயா சாஸ்
  15. 1 டீஸ்பூன் பிரியாணி மசாலா
  16. 2 1/2 கப் பாசுமதி அரிசி
  17. 2டீஸ்பன் நல்லமிளகு பொடி,1 டீஸ்பூன் வத்தல் தூள்,1டீஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

3/4 மணி நேரம்
  1. 1

    காளான் 2 கப் நன்றாக கழுவி சிறு துண்டாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் 50கிராம் காளான் மசாலா, 2 டீஸ்பூன் மைதா,2 டீஸ்பூன் சோள மாவு,1/2 டீஸ்பூன் உப்பு,1/2 டீஸ்பூன் வத்தல் தூள்,1/2 எலுமிச்சைப் பழம் சேர்த்து நன்கு கலக்கவும.

  2. 2

    கலந்து எடுத்த மசாலாவை காளானில் சேர்க்கவும்.பின் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.பின்பு எண்ணெய்யில் இட்டு பொறித்து எடுக்கவும்.

  3. 3

    ப்ரைடு ரைஸ் செய்ய ஒரு சட்டியில் எண்ணெய் சேர்த்து பட்டை,கிராம்பு,ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.பின் 2 கேரட்,3 பீன்ஸ்,2 மிளகாய் சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.அடுத்து 4 முட்டை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறவும்.

  4. 4

    பின்பு அதனுடன் 1 டீஸ்பூன் தக்காளி சாஸ்,மிளகாய் சாஸ்,1/2 டீஸ்பூன் சோயா சாஸ்,1 டீஸ்பூன் பிரியாணி மசாலா,2 டீஸ்பூன் நல்லமிளகு பொடி,1 டீஸ்பூன் வத்தல் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.பின்பு பொறித்து எடுத்த காளானை சேர்க்கவும்.

  5. 5

    2 1/2 கப் பாசுமதி அரிசியுடன் தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.பின்பு 2 1/2 கப் அரிசிக்கு 5 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.வெந்த சாதத்தை காளானுடன் சேர்த்து கலந்து விடவும்.கடைசியாக 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும்.சுவையான காளான் ப்ரைடு ரைஸ் ரெடி.நீங்களும் செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
SheelaRinaldo
SheelaRinaldo @cook_27658637
அன்று
Kanyakumari

Similar Recipes