ட்ரை ஃப்ரூட் கேக் (Dryfruit cake recipe in tamil)

Sara's Cooking Diary
Sara's Cooking Diary @Rayeeza
Madurai

ட்ரை ஃப்ரூட் கேக் (Dryfruit cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
4 நபர்கள்
  1. 3முட்டை
  2. 1/4 டீஸ்பூன்உப்பு
  3. 1/2டீஸ்பூன்வெண்ணிலா எசன்ஸ்
  4. 1 கப்சற்கறை
  5. 1 கப்பால்
  6. 1/2 கப்எண்ணெய்
  7. 2 டீஸ்பூன்பேக்கிங் பவுடர்
  8. 1/4 டீஸ்பூன்பட்டைதூள்
  9. 2 கப்மைதாமாவு
  10. 1/4 கப்புளு பெரி
  11. 1/4 கப்ராஸ்பெரி
  12. 3/4 கப்வெள்ளை உலர் திராட்சை
  13. 3/4 கப்கருப்பு உலர் திராட்சை
  14. 3/4 கப்டுட்டி ப்ரூட்டி
  15. 1/4 கப்பேரிட்சை
  16. தேன்- தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    ஒரு பவுலில் ட்ரை ப்ரூட்ஸ் அனைத்தையும் சேர்த்து அதனுடன் தேன் சேர்த்து கலந்து குறைந்தது நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

  2. 2

    ஒரு பவுலில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். அதனுடன் உப்பு மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

  3. 3

    பிறகு சர்க்கரை, பால் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

  4. 4

    ஒரு சல்லடையில் பேக்கிங் பவுடர், பட்டைத்தூள் மற்றும் மைதா மாவு சேர்த்து கொள்ள வேண்டும்.

  5. 5

    மாவை நன்கு சலித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். சலித்த மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

  6. 6

    பிறகு ஊறவைத்த டிரைஃப்ரூட்ஸை மாவில் சேர்க்க வேண்டும். ஒரு கேக் பானில் எண்ணெய் தடவி மைதா மாவை தூவி கிரீஸ் செய்த பிறகு கேக் மாவை ஊற்ற வேண்டும். பிறகு அவனில் வைக்கவேண்டும்.

  7. 7

    கண்வெக்க்ஷன் மோடில் 180 டிகிரி செல்சியஸில் 50 நிமிடம் வைத்தாள் சுவையான டிரைஃப்ரூட்ஸ் கேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sara's Cooking Diary
அன்று
Madurai

Similar Recipes