இட்லி மஞ்சூரியன்(Idli manchurian recipe in tamil)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#onwrecipe
இட்லி அனைவருக்கும் உகந்த ஒரு டிபன் ஆகும் இது எளிதில் ஜீரணமாகக் கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது எல்லா காலங்களிலும் சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும்

இட்லி மஞ்சூரியன்(Idli manchurian recipe in tamil)

#onwrecipe
இட்லி அனைவருக்கும் உகந்த ஒரு டிபன் ஆகும் இது எளிதில் ஜீரணமாகக் கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது எல்லா காலங்களிலும் சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம் அவித
6 பேர்
  1. 15இட்லி
  2. 4பெரிய வெங்காயம் பொடிப் பொடியாக நறுக்கியது
  3. 4தக்காளி பொடிப் பொடியாக நறுக்கியது
  4. 2 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  5. 1பச்சை மிளகாய்
  6. ஒரு ஸ்பூன்ரெட் சில்லி சாஸ்
  7. 2 டேபிள்ஸ்பூன்தக்காளி சாஸ்
  8. பத்து டேபிள்ஸ்பூன்மக்காச்சோள மாவு
  9. 2 டேபிள் ஸ்பூன்மல்லி சீரகத்தூள் சேர்த்து அரைத்தது
  10. ஒரு டேபிள்ஸ்பூன்காஷ்மீரி மிளகாய்த்தூள்
  11. உப்பு தேவையான அளவு
  12. தேவையானஅளவு எண்ணெய்
  13. 2குடை மிளகாய்
  14. தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம் அவித
  1. 1

    தேவையான பொருள்கள்

  2. 2

    ஒரு இரும்பு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் வெங்காயம் கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்

  3. 3

    வெங்காயம் நன்கு வெந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவேண்டும் பின் இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனதும் வெட்டி வைத்துள்ள தக்காளியை சேர்க்கவேண்டும் தக்காளி நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை உள்ளே சேர்க்க வேண்டும்

  4. 4

    துண்டு துண்டுகளாக வெட்டி வைத்துள்ள இட்லி துண்டுகளை மேலே கூறியவாறுபத்து டேபிள் ஸ்பூன் சோள மாவுடன் சிறிதளவு உப்பு மிளகாய்த்தூள் கலந்து வைத்துள்ள கலவையில் இட்லி துண்டுகளை நனைத்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்

  5. 5

    மேலே கூறியவாறு வெங்காயம் தக்காளி குடை மிளகாய் வதங்கியதும் எடுத்து வைத்த தக்காளி சாஸ் மற்றும் ரெட் சில்லி சாஸ் கலவையை உள்ளே சேர்க்க வேண்டும் வேண்டும் பின் மல்லித்தூள் சீரகத்தூள் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்

  6. 6

    மஞ்சூரியன் மசாலா ரெடி ஆனவுடன் நாம் பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை அத்துடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும் இறுதியாக மல்லி இலை தூவி இறக்கவேண்டும் இப்போது சூடான சுவையான இட்லி மஞ்சூரியன் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
அன்று

Similar Recipes