முட்டையில்லாத சாக்லேட்  சிரப் கேக் (Eggless Chocolate Syrup  cake recipe in Tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#Grand2

*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 1/2 கப் மைதா மாவு
  2. 1/2 கப் கோகோ பவுடர்
  3. 1/4 கப் எண்ணெய்
  4. ஒரு டேபிள்ஸ்பூன் வெனிலா எஸன்ஸ்
  5. ஒரு டேபிள்ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடர்
  6. முக்கால் கப் காய்ச்சி ஆறவைத்த பால்
  7. ஒன்றரை டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  8. அரை டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா
  9. சாக்லெட் ஸ்கரப் செய்வதற்கு
  10. 100 கிராம் சாக்லேட் காம்பவுண்ட்/டார்க் சாக்லேட்
  11. கால் கப் பால்
  12. 2 டேபிள்ஸ்பூன் பட்டர்
  13. 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  14. 4 டேபிள்ஸ்பூன்தண்ணீர்
  15. அலங்கரிக்க
  16. ஒயிட் சாக்லேட் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் ஸ்டாண்ட் வைத்து அதனை மூடி போட்டு மூடி குறைவான தீயில் வைத்து பிரிஹீட் செய்து கொள்ளவும்.ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் பால் சர்க்கரை வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.

  2. 2

    அதன் மேல் ஒரு சல்லடை வைத்து கொடுத்துள்ள கோக்கோ பவுடர் மைதா மாவு காப்பித்தூள் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு சலித்து பின் அதனை நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு மோல்டில் எண்ணெய் தடவி அதன் மேல் பட்டர் பேப்பரை வைத்து கலந்து உள்ள கலவையை ஊற்றி ப்ரீயிட் செய்துள்ள கடாயில் உள்ளே வைத்து 50 முதல் 55 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

  4. 4

    இவை வந்ததா என்பதை சரிபார்த்து வெளியே எடுத்து நன்கு ஆற வைத்த பிறகு பட்டர் பேப்பரை நீக்கவும்.

  5. 5

    இப்பொழுது இந்த கேக்கை இரண்டாக கட் செய்து சுகர் சிறப்பை இருக்கைகள் மீதும் தடவிக் கொள்ளவும். டபுள் பாய்லர் முறைப்படி ஒரு பாத்திரத்தில் பட்டரை உறுக்கவும்.

  6. 6

    இப்பொழுது துருவிய டார் காம்பவுண்ட் சேர்த்து உருக வைத்து அதனுடன் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இப்பொழுது சாக்லெட் சிரப் தயார் இதனை அந்த கேக்கின் மேல் மற்றும் சுற்றிலும் தடவி கொள்ளவும்.

  7. 7

    இதன் மேல் துருவிய ஒயிட் சாக்லேட்டை தூவி அலங்கரித்து கொடுத்தாள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes