பட்டர் கேக்(butter cake recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#CF9

மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும்

பட்டர் கேக்(butter cake recipe in tamil)

#CF9

மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 170 கிராம் மைதா
  2. 20 கிராம் கார்ன்ப்ளார்
  3. 1_1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  4. 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா
  5. 150 மில்லி மில்க்மெயின்ட்
  6. 75 கிராம் சர்க்கரை
  7. 100 கிராம் பட்டர்
  8. 175 மில்லி எவரப்டு பால் சுண்டக்காய்ச்சிய வெதுவெதுப்பான பால்
  9. 1 ஸ்பூன் வெனிலா எசென்ஸ்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    மைதா கார்ன் ப்ளார் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து மூன்று முறை ஜலித்து கொள்ளவும்

    ஒரு மிக்ஸி ஜாரில் பட்டர் சர்க்கரை மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு அடிக்கவும்

  2. 2

    இந்த மாதிரி க்ரீமியா வரும் வரை அடித்து எடுக்கவும் பால் நான் டின் ல கிடைக்கற பாலை பயன்படுத்தி இருக்கிறேன் சற்று சூடாக்கி இளஞ்சூடாக கை பொறுக்கும் சூட்டில் இருப்பது அவசியம் ஃபுல் க்ரீம் மில்க் ஆக இருந்தாலும் அதை சற்று சுண்ட காய்ச்சி திக்காக எடுத்தால் கேக் நன்றாக வரும்

  3. 3

    பின் ஜலித்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக சேர்த்து மெதுவாக கிளறவும்

  4. 4

    பின் பாலை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து கொள்ளவும் கூட வெனிலா எசென்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்

  5. 5

    மிகவும் திக்காகவும் இருக்க கூடாது தண்ணீயாட்டவும் இருக்க கூடாது இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்

  6. 6

    பின் பட்டர் தடவி மைதா டஸ்ட் செய்த ட்ரேயில் கொட்டவும் பின் சமப்படுத்தி லேசாக ட்ரேயை டேப் செய்யவும்

  7. 7

    180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வரை சூடாக்கிய ஓவனில் வைத்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்

  8. 8

    சுவையான ஆரோக்கியமான முட்டை இல்லாத பட்டர் கேக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes