முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்...

முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)

#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1கப் பிரியாணி அரிசி
  2. 1/4 கப் முழு முந்திரி
  3. 1/4 கப் கேரட்
  4. 1/4 கப் பீன்ஸ்
  5. 1/4 கப் முளை கட்டின பச்சை பட்டாணி
  6. 1/4 கப் உருளைக்கிழங்கு
  7. 1/4 கப் வெங்காயம் பொடியாக நறுக்கின
  8. பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை, சீரகம்
  9. 2ஸ்பூன் மிளகாய்த்தூள்
  10. 1ஸ்பூன் மல்லி தூள்
  11. 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  12. மல்லி, புதினா இலை
  13. உப்பு, நெய், எண்ணெய் தேவைக்கு
  14. 2பச்சயமிளகாய்
  15. 1/2 கப் தயிர்

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    பிரியாணி அரிசியை 20 நிமிடம் தண்ணியில் ஊறவிடவும், முழு முந்திரி பருப்பை 1மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக்கவும்.

  2. 2

    ஒரு மணி நேரத்துக்கு பிறகு முந்திரியை மிக்ஸியில் 1/2 கப் தண்ணி சேர்த்து விழுதாக தன்னியாக அரைத்து எடுத்துக்கவும். முந்திரி பால் தயார்

  3. 3

    ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை சீரகம், பட்டை, சோம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக்கவும்

  4. 4

    அத்துடன் எடுத்து வெச்சிருக்கும் எல்லா மசாலா தூள் சேர்த்து சேர்த்து வதக்கி, தக்காளி மற்றும் நறுக்கி வைத்திருக்கும் காய் சேர்த்து வதக்கி, உப்பு தயிர் மல்லி, புதினா இலை சேர்த்து ஸ்டவ் ஆப் செய்யவும்

  5. 5

    எலக்ட்ரிக் ரைஸ் குக்கரில் அரிசி, முந்திரி பால் 1கப் + 1 கப் தண்ணி சேர்த்து, அத்துடன் வதக்கி வைத்திருக்கும் காய் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து வேக விட்டுக்கவும்.15 - 20 நிமிடத்துக்குள் பிரியாணி சாப்பிட தயார்.. மிக சுவையான சத்துக்கள் நிறைந்த முந்திரிபால் பிரியாணி செய்து பார்த்து சுவைக்கவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes