நாட்டு சர்க்கரை பொங்கல் (Naattu sarkarai pongal recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30mins
4 பரிமாறுவது
  1. 1கப் பச்சரிசி
  2. 1/2கப் பாசிப்பருப்பு
  3. 3கப் தண்ணீர்
  4. 1 1/2கப் நாட்டு சக்கரை
  5. 3டேபிள்ஸ்பூன் நெய்
  6. 1டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  7. 12உடைத்த முந்திரி
  8. 10காய்ந்த திராட்சை
  9. 1டேபிள்ஸ்பூன் சாரை பருப்பு

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    1/2 கப் பாசிப்பருப்பு கடாயில் சேர்த்து லேசாக வறுத்து எடுத்து வைக்கவும்.1கப் பச்சரிசியை எடுத்து வைக்கவும். இரண்டையும் சேர்த்து கழுவி வைக்கவும்.1 1/2 கப் நாட்டுச்சக்கரை எடுத்து வைக்கவும்.12 உடைத்த முந்திரி,10 காய்ந்த திராட்சை எடுத்து வைக்கவும்.

  2. 2

    கழுவி வைத்த அரிசி பாசிப்பருப்பு இரண்டையும் 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வேகவிட்டு, நன்கு குழைய வேகவிடவும். நாட்டுச் சர்க்கரையை ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி வைக்கவும்.

  3. 3

    நாட்டுச் சர்க்கரை பாகுவை வடித்து குக்கரில் சேர்த்து விடவும்.நன்கு கலக்கி ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். 1 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

  4. 4

    கடாயில் 3 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து, 1 டீஸ்பூன் சாரைப்பருப்பு, எடுத்து வைத்த முந்திரி திராட்சையை பொன்னிறமாக வறுத்து பொங்கலில் சேர்த்து விடவும்.

  5. 5

    சுவையான நாட்டு சர்க்கரை பொங்கல் ரெடி😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes