அனைவருக்கும் பிடித்த அருமையான சிக்கன் சுக்கா !! (Chicken sukka recipe in tamil)

karthika karthika
karthika karthika @cook_28364251
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
இரண்டு பேர்
  1. 200 கிராம் சிக்கன்
  2. 50 கிராம் சின்ன வெங்காயம்பொடியாக நறுக்கியது
  3. இடிச்ச இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்
  4. 5பூண்டு நறுக்கியது
  5. ஒரு வரமிளகாய்
  6. கருவேப்பிலை சிறிதளவு
  7. சிறிதளவுபட்டை 2 கிராம் 2 ஏலக்காய் 5 முந்திரி பிரியாணி இலை ஒன்று
  8. தாளிப்பதற்கு
  9. சிறிதளவுகடுகு உளுத்தம்பருப்பு சோம்பு
  10. மசாலா பொருட்கள்
  11. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  13. ஒரு ஸ்பூன் சீரகத் தூள்
  14. மிளகுத்தூள் தேவைக்கு ஏற்ப
  15. உப்பு தேவைக்கேற்ப
  16. நல்லெண்ணெய் தேவைக்கேற்ப
  17. நறுக்கிய தக்காளி சிறிதளவு

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    சிக்கனை துண்டு துண்டாக நறுக்கி மஞ்சள்தூள் சேர்த்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    வாணலில் நல்லெண்ணெயை ஊற்றி சிறிதளவு கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்துக்கொள்ளவும் கடுகு பொரிந்தவுடன் சிறிதளவு சோம்பு முந்திரிப் பருப்பு சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    அடுத்து வரமிளகாய் ஒன்று நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    சின்ன வெங்காயம் வதங்கியவுடன் இடிச்ச இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் மற்றும் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்

  5. 5

    தக்காளி மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சிறிதளவு மஞ்சள் தூள் தேவைக்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

  6. 6

    தக்காளி வதங்கியவுடன் துண்டு துண்டாக நறுக்கிய சிக்கனை சேர்த்து வதக்கவும் சிறிதளவு தண்ணீர் தெளித்து விடவும். சிக்கன் வேகும் வரை மூடி வைக்கவும்

  7. 7

    இப்போது சிக்கன் வெந்தவுடன் ஒரு ஸ்பூன் சீரகத்தூள் ஒரு ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து கிளறி விடவும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி கிளறவும். அனைவருக்கும் பிடித்த அருமையான சிக்கன் சுக்கா ரெடி!!!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

karthika karthika
karthika karthika @cook_28364251
அன்று

Similar Recipes