மணத்தக்காளி கீரை பருப்பு மசியல் (Manathakkali keerai paruppu masiyal recipe in tamil)

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

#jan2
விட்டமின் டி மற்றும் இ நிறைந்துள்ள மணத்தக்காளி கீரை வாய்ப்புண், வயிற்றுப்புண் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

மணத்தக்காளி கீரை பருப்பு மசியல் (Manathakkali keerai paruppu masiyal recipe in tamil)

#jan2
விட்டமின் டி மற்றும் இ நிறைந்துள்ள மணத்தக்காளி கீரை வாய்ப்புண், வயிற்றுப்புண் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
நான்கு பேர்
  1. ஒரு கட்டு மீடியம் அளவு மணத்தக்காளிக்கீரை
  2. நூறு கிராம் துவரம் பருப்பு
  3. ஒரு பெரிய வெங்காயம்
  4. ஒரு பெரிய தக்காளி
  5. இரண்டு பச்சை மிளகாய்
  6. உப்பு தேவையான அளவு
  7. சமையல் எண்ணைய் தாளிக்க போதுமான அளவு
  8. தாளிக்க
  9. கால் டீஸ்பூன் கடுகு
  10. கால் டீஸ்பூன் சீரகம்
  11. இரண்டு வரமிளகாய்
  12. 2 ஆர்க்கு கருவேப்பிலை
  13. மூன்று சிட்டிகை பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    துவரம்பருப்பை கழுவி தேவையான நீர் விட்டு மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்

  2. 2

    மணத்தக்காளிக் கீரையை ஆய்ந்து, நன்கு அலசி அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் அரை டம்ளர் நீர் விட்டு வேக வைத்து, ஆறவிடவும்

  3. 3

    நன்கு ஆறிய கீரையை மிக்ஸியில் பல்ஸ் மோடில் ஐந்து முறை சுற்றி மற்றும் ஒன்றாம் நம்பர் வேகத்தில் 5 நொடிகள் அரைத்து எடுக்கவும். அதிக நேரம் அரைய விட்டால் கீரை கூழாக ஆகிவிடும். ருசியும் மாறிவிடும்.

  4. 4

    அரைத்த கீரையை வேகவைத்த பருப்புடன், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்துக் கொட்டி அலங்கரித்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes