நச்சுகொட்டைகீரைரத்த பொரியல் (Nachukottai keerai raththa poriyal recipe in tamil)

Chitra Kumar
Chitra Kumar @cook_16899134

#jan2 இந்தக் கீரை பெண்களுக்கு ஏற்படும் உடல் வலி இடுப்பு வலி கை கால் வலி ஆண்களுக்கும் இது ரொம்ப நல்லது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்து கிராமப்பகுதிகளில் மாதத்திற்கு ஒருமுறை இதுபோல் ரத்தப் பொரியல் செய்து சாப்பிடுவார்கள் அசைவம் பிடிப்பவர்கள் இதுபோல் செய்து சாப்பிடலாம் முட்டை பொரியல் செய்து சாப்பிடலாம் அல்லது பருப்பு போட்டு கூட்டாகவும் செய்து சாப்பிட நல்ல தீர்வு கிடைக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நி
5 பரிமாறுவது
  1. ஒரு கட்டுநச்சுக்கொட்டைக் கீரை
  2. ஒரு கப்ஆட்டு ரத்தம்
  3. ஒரு கப்சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது
  4. 5பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
  5. 10பூண்டு பல் பொடியாக நறுக்கியது
  6. தேங்காய்த் துருவல் ஒரு கப்
  7. நல்லெண்ணெய் ஒரு குழிக்கரண்டி
  8. கடுகு உளுந்து ஒரு ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. சீரகத் தூள் ஒரு ஸ்பூன்
  11. 2 ஸ்பூன்சோம்புத்தூள்
  12. மிளகுத் தூள் ஒரு ஸ்பூன்
  13. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30நி
  1. 1

    கீரையின் நடுவில் உள்ள நரம்பை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி கழுவி வைக்கவும்

  2. 2

    ஆட்டு ரத்தத்தை கழுவி விட்டு நன்கு கரைத்து வைக்கவும்

  3. 3

    அடுப்பில் சட்டி வைத்து நல்லெண்ணெய் விட்டு கடுகு உளுந்து போட்டு பொரிந்ததும் பச்சை மிளகாய் பூண்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி அதில் கீரையையும் சேர்த்து வதக்கவும்

  4. 4

    கீரை வதங்கும் போது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும் வெந்ததும் கரைத்து வைத்துள்ள இரத்தத்தை ஊற்றி சோம்பு தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் உப்பு போட்டு நன்குவதக்கவும்

  5. 5

    நன்கு வதங்கி கருப்பு கலரில் உதிரி உதிரியாக வரும் அந்த நேரத்தில் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும் குறைந்த தீயில்

  6. 6

    சூடான சுவையான ரத்தப் பொரியல் தயார் அசைவம் பிடிக்காதவர்கள் பருப்பு வேகவைத்து உசிலி போல் செய்து சாப்பிடலாம்

  7. 7

    இது ஒரு கிராமம் மக்களின் சாப்பாடு வெறும் ரத்தப்பொரியல் உடம்புக்கு நல்லது அது கூட இந்த கீரை சேர்த்து செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் குறுக்கு வலி கை கால் வலி ரத்த ஓட்டம் சரியாகும் இந்த கீரை உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் இலட்ச கட்ட கீரை என்றும் கூறுவர்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chitra Kumar
Chitra Kumar @cook_16899134
அன்று

Similar Recipes