கருவாடு தொக்கு (Karuvadu thokku recipe in tamil)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#Ownrecipe
கருவாடு பிடிக்காதவர்கள் கூட நாம் இவ்வாறு செய்யும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4பேர்
  1. கருவாடு நன்கு சுத்தம் செய்தது
  2. 2பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  3. 2பச்சை மிளகாய்
  4. 4தக்காளி பொடி பொடியாக நறுக்கியது
  5. தேவையான அளவுமஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தேவையான பொருள்கள்

  2. 2

    கருவாடை நன்கு சூடு செய்த வெண்ணீரில் போட்டு நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும் பின் ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் விட்டு எண்ணெய் நன்கு சூடானதும் நாம் கழுவி வைத்துள்ள கருவாடு துண்டுகளை போட்டு எண்ணெயில் பொரித்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்

  3. 3

    பின் அதே வாணலியில் நான் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் வெங்காயத்தைப் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும் பின் அதனுடன் நாம் வெட்டி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பச்சை மிளகாயை அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    பின் தேவையான அளவு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்

  5. 5

    பின் கடைசியாக நாம் ஏற்கனவே எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்துள்ள கருவாடு துண்டுகளை அதில் போட்டு நன்கு மசித்துக் கொள்ளவும் இப்போது காரசாரமான சுவையான கருவாடு தொக்கு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
அன்று

Similar Recipes