உருளைக்கிழங்கு க்ரீன் மசால்(potato masala recipe in tamil)

பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை அரைத்த விழுது சேர்த்து செய்யும் இந்த மசால் மிகவும் சுவையாக இருக்கும். #pot
உருளைக்கிழங்கு க்ரீன் மசால்(potato masala recipe in tamil)
பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை அரைத்த விழுது சேர்த்து செய்யும் இந்த மசால் மிகவும் சுவையாக இருக்கும். #pot
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், அரைத்த விழுது சேர்த்து 1/2 நிமிடம் வதக்கி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், கேரட், கொத்தமல்லித்தழை விழுது, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
இதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும். பின் உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி, சேர்த்து நன்கு வதக்கவும் 1 டம்ளர் தண்ணீர் விட்டு வேக விடவும்.
- 4
1டீஸ்பூன் பொட்டுக்கடலைத்தூள், 2டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்து கரைத்து இதில் ஊற்றி மிதமான தீயில் வேகவிடவும். அடிக்கடி கிளறி விடவும்.
- 5
பின்னர் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும். பூரி, சப்பாத்தி, ஃப்ரைடுரைஸ் உடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (5)