ராகி பிரியாணி (Ragi biryani recipe in tamil)

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah

ராகி ,கேழ்வரகு ,கேப்பை ,என்று அழைக்கப்படுகிறது. 100 கிராம் ராகி மாவில் 7.3 கிராம் புரதச்சத்தும் 3.6 கிராம் நார்ச்சத்தும் 344 கிராம் கால்சியம் சத்தும் 3.9 கிராம் இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. குழந்தைகளுக்கு ராகி உணவு கொடுப்பதனால் பற்களும் எலும்புகளும் உறுதியளிக்கும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கேழ்வரகில் டிரிப்டோபான் எனப்படும் வேதிப்பொருள் உள்ளதால் பசி அதிகரிப்பதை கட்டுப்படுத்தி உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது இது நரம்பை பலப்படுத்தும் சக்தி அதிக அளவில் உள்ளது.(finger millet)#ga4#week20

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
  1. ஒரு கப்ராகி மாவு
  2. அரை கப்வெள்ள ரவை
  3. 2 டேபிள் ஸ்பூன்வெங்காயம்
  4. 2பச்சை மிளகாய்
  5. ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு நறுக்கியது
  6. ஒரு டேபிள்ஸ்பூன்தக்காளி
  7. தேவையானஅளவுபுதினா கொத்தமல்லி கருவேப்பிலை
  8. தாளிப்பதற்கு கடுகு உளுத்தம் பருப்பு
  9. பட்டை கிராம்பு ஏலம் சோம்பு
  10. தேவையானஅளவுநெய்
  11. தேவையானஅளவுதண்ணீர்
  12. தேவையானஅளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் கடுகு தாளித்து பட்டை கிராம்பு ஏலம் பிரிஞ்சி இலை சோம்பு சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    இதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு இஞ்சி தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    நன்கு வதங்கியதும் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் பிறகு ரவையை சேர்த்து நன்கு கிளறவும். ரவை அரைப்பதற்கு வெந்ததும் சிறிது சிறிதாக ராகி மாவை சேர்த்து நன்கு கிளறவும் பிறகு உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.

  5. 5

    அடுப்பை மிதமான தீயில் வைத்து ராகி பிரியாணியை வேக வைக்கவும். புதினா இலை மல்லி இலை தூவி தயிர் பச்சடியுடன் பரிமாறலாம்.

  6. 6

    ராகி பிரியாணிக்கு புதினா சட்னி தயிர் பச்சடி சிறந்த காம்பினேஷன். ராகி மாவு ஒரு கப் ரவை அரை கப் ஒன்னரை கப்புக்கு 3 கப் என்று தண்ணீர் அளந்து கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes