தேவையான பொருட்கள்

3 மணி நேரம்
10 நபர்
  1. 2 கப் மைதா மாவு
  2. 1ஸ்பூன் சர்க்கரை
  3. 1ஸ்பூன் ஈஸ்ட்
  4. தேவையான அளவு தண்ணீர்
  5. தேவையான அளவுஎண்ணெய்
  6. தேவையான அளவுஉப்பு
  7. 3தக்காளி
  8. 2சிவப்பு மிளகாய்
  9. 3பெரிய வெங்காயம்
  10. 1 ஸ்பூன் சில்லி சாஸ்
  11. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  12. 2 ஸ்பூன் வெண்ணை
  13. 1/2 கப் பால்
  14. 1/2 கிலோ போன்லெஸ் சிக்கன்
  15. 2 ஸ்பூன் தயிர்
  16. 2 ஸ்பூன் மிளகுத்தூள்
  17. 1 ஸ்பூன் கரம் மசாலா
  18. 1 ஸ்பூன் சீரக தூள்
  19. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  20. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  21. 2கேப்ஸிகம்
  22. 100 கிராம் சீஸ்

சமையல் குறிப்புகள்

3 மணி நேரம்
  1. 1

    பேஸ் செய்ய:
    ஒரு டம்ளரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை,ஒரு ஸ்பூன் ஈஸ்ட் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு பௌலில் மைதா மாவைக் கொட்டி அதில் ஊறவைத்த ஈஸ்ட்டை ஊற்றி கொள்ளவும் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    மாவைப் பிசைந்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்கு நன்கு பிசைந்து ஊற விடவும் பிறகு அதை உருண்டை பிடிக்கவும்

  4. 4

    மாவை கனமாக தேய்த்துக் கொள்ளவும் பிறகு ஒரு தட்டில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்

  5. 5

    அந்த தட்டில் எண்ணெய் ஊற்றி சுற்றிலும் நன்கு தேய்த்து தேய்த்த மாவை போட்டுக் கொள்ளவும் பிறகு ஸ்போர்க் ஸ்பூன் வைத்து மாவை குத்தி விடவும்

  6. 6

    பீசா சாஸ் செய்ய:
    ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வெங்காயத்தை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும் அதை கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும்

  7. 7

    பிறகு தக்காளியை நுனியில் நான்காக தோல் சீவி சேர்த்துக்கொள்ளவும் பிறகு இரண்டு சிவப்பு மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்

  8. 8

    நன்கு கொதிக்கவிடவும் காய்கள் வெந்தவுடன் அதை ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து கொள்ளவும்

  9. 9

    ஒவ்வொன்றாக மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் அதில் எண்ணெய் ஊற்றவும்

  10. 10

    அரைத்த சாரை எடுத்துக் கொள்ளவும் பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் எடுத்துக்கொள்ளவும் பிறகு ஒரு ஸ்பூன் சில்லி சாஸ் சேர்த்துக்கொள்ளவும்

  11. 11

    சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாடை போகும் வரை கிளறவேண்டும் பிறகு அதை மைதா பெசில் சேர்த்துக் கொள்ளவும்

  12. 12

    ஒயிட் சாஸ் செய்ய:
    பாலில் 2 ஸ்பூன்,வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும் பிறகு இரண்டு ஸ்பூன் மைதா சேர்த்துக் கொள்ளவும் அதில் அரை கப் பால் சேர்த்துக் கொள்ளவும்

  13. 13

    நன்கு கிளறி விட்டு சிறிதளவு உப்பு,மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும் அதையும் மைதா பேசில் சேர்த்துக் கொள்ளவும்

  14. 14

    சிக்கனை வருக்க:
    ஒரு பவுலில் சிக்கனை எடுத்துக்கொள்ளவும் பிறகு அதில் இரண்டு ஸ்பூன் தயிர்,ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும்

  15. 15

    ஒரு ஸ்பூன் கரம் மசாலா,ஒரு ஸ்பூன் சீரக தூள்,ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும்

  16. 16

    கால் ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கொள்ளவும்

  17. 17

    அனைத்தையும் நன்கு கிளறி ஊறவைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்

  18. 18

    பிறகு ஊறவைத்த சிக்கனை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  19. 19

    செய்து வைத்த பேசில் சீஸ் சேர்த்து பிறகு சிக்கனை சேர்த்துக் கொள்ளவும் பிறகு விருப்பத்திற்கேற்ப காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்

  20. 20

    கேப்ஸிகம்,தக்காளி,வெங்காயம் இவற்றை நீளமாக நறுக்கிய ஓன்றாக துருவிக்கொள்ளவும்

  21. 21

    பிறகு அதற்கு மேல் சீஸை துருவிக் கொள்ளவும்

  22. 22

    குக்கரில் விசில் இல்லாமல் மண் சேர்த்து அதற்கு மேல் ஸ்டாண்ட் வைத்து பீசா தட்டை வைத்து வேக விடவும் பிறகு அகலமான தாச்சியில் மண்கள் சேர்த்து அதற்கு மேல் கல் வைத்து அதற்கு மேல் பீசா தட்டை வைத்து வேகவிடவும்

  23. 23

    வெந்தபின் திறந்து சிறிது நேரம் ஆறவிடவும் பிறகு எடுத்து பரிமாறவும்..... சீஸி சிக்கன் பீசா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shuraksha Ramasubramanian
அன்று

Similar Recipes