எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 250 கிராம் சுரைக்காய்
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 4தக்காளி
  4. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1 ஸ்பூன் சாம்பார் பொடி
  6. 2 டேபிள்ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  7. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள்
  9. 2 சிட்டிகை பெருங்காயத்தூள்
  10. உப்பு தேவையான அளவு
  11. 1/4 கப் எண்ணெய்
  12. 1 ஸ்பூன் கடுகு
  13. 1 ஸ்பூன் சீரகம்
  14. 1 மூடி தேங்காய் துருவியது
  15. 1 ஸ்பூன் சோம்பு
  16. 1_1/2 ஸ்பூன் கசகசா
  17. 2 ஸ்பூன் பொட்டுக்கடலை
  18. கறிவேப்பிலை சிறிது
  19. கொத்தமல்லி தழை சிறிது

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய சுரைக்காய் சேர்த்து வதக்கவும்

  2. 2

    பின் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும் பின் சாம்பார் பொடி கறி மசாலா தூள் பெருங்காயத்தூள் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்

  3. 3

    தேங்காய் சோம்பு கசகசா பொட்டுக்கடலை சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்

  4. 4

    பின் சுரைக்காய் வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும் நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி தழை சிறிது தூவி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes