ஆறு வகையான முட்டை ஆம்லெட் (Muttai omelette recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

குழந்தைகளின் விருப்ப உணவு
#GA4
#WEEK22
#Omelette

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 6 முட்டை
  2. 3வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 1 குடைமிளகாய்,கேரட்
  5. 50 கிராம் முட்டைக் கோஸ்
  6. 2உருளைக் கிழங்கு
  7. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. 1பூண்டு
  9. தேவைக்கேற்ப எண்ணெய்,உப்பு
  10. 1 ஸ்பூன் மிளகுத் தூள், மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள்
  11. 1/4 ஸ்பூன் கரம்மசாலா

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் காய்களை வெட்டிக் கொள்ள வேண்டும்

  2. 2

    இஞ்சிப்பூண்டை தட்டி விழுதாகிக் கொள்ளவும்

  3. 3

    முதலில் சாதாரணமான ஆம்லெட் செய்முறை; ஒருப்பாத்திரத்தில் முட்டையை ஊற்றி அதில் உப்பு,மிளகுத்தூள்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும்

  4. 4

    பின் அனைத்தையும் அடித்துக் கலக்கவும் தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி அடித்து வைத்திருந்த,முட்டையை ஊற்றிக் கொள்ளவும் ஒருப்புறம் வெந்ததும் மறுப்புறம் திருப்பிக் கொள்ளவும்

  5. 5

    பின் பரிமாறவும் சுவையான ஆம்லெட் சூடாக தயார்

  6. 6

    இரண்டாவதாக வெங்காயம் தக்காளி அம்லெட் ; பாத்திரத்தில் முட்டை,உப்பு,மிளகு,வெங்காயம் சேர்க்கவும்

  7. 7

    பின் தக்காளிச் சேர்த்துக் கொள்ளவும் நன்றாக கலந்துக் கொண்டு கல்லில் எண்ணெய் விட்டு முட்டையை ஊற்றவும் இருப்புறமும் வேக வேண்டும்

  8. 8

    பின் பரிமாறவும் வெங்காயம்தக்ககாளி ஆம்லெட் தயார்

  9. 9

    மூன்றாவதாக மசாலா ஆம்லெட் ; பாத்திரததில் முட்டை,உப்பு,மிளகுத்தூள்,இஞ்சிப்பூண்டு விழுதுச் சேர்த்துக் கொள்ளவும்

  10. 10

    பின் வெங்காயம்,தக்காளி,மஞ்சள்த்தூள்ச் சேர்த்துக் கலக்கவும்

  11. 11

    பின் மிளகாய்த்தூள்,மல்லித்தூள்ச் சேர்த்து அடித்துக் கலக்கவும் கல்லில் எண்ணெய் ஊற்றி கலவையை ஊற்றிக் கொள்ளவும்

  12. 12

    இருப்புறமும் வெந்ததும் பரிமாறவும் மசாலா ஆம்லெட் தயார்

  13. 13

    நான்காவதாக கேரட்குடைமிளகாய் ஆம்லெட் ; பாத்திரத்தில் முட்டை,உப்பு,மிளகுத்தூள்ச் சேர்த்துக் கொள்ளவும்

  14. 14

    பின் துருவியக் கேரட்,குடைமிளகாய்ச் சேர்த்துக் கொள்ளவும் கலக்கியப்பின் எண்ணெய்ச் சேர்த்து கல்லில் ஊற்றிக் கொள்ளவும்

  15. 15

    இருப்புறமும் வெந்ததும் பரிமாறவும் சுவையாக இருந்தது கேரட்குடைமிளகாய் ஆமலெட் தயார்

  16. 16

    ஐந்தாவதாக உருளைக்கிழங்கு ஆம்லெட் ; தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், உருளைக்கிழங்குச் சேர்த்துக் கொள்ளவும்

  17. 17

    பின் உப்பு, மிளகுத்தூள்ச் சேர்த்துக் கொள்ளவும் முட்டை மற்றும் கிழங்கு வாயு என்பதால் பூண்டுச் சேர்த்துக் கொள்ளவும் வதக்கவும்

  18. 18

    நன்றாக வதங்கியதும் அனைத்தும் வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றவும் ஒரு ஸ்பூனால் பரப்பு விடவும்

  19. 19

    இருப்புறமும் வெந்ததும் பரிமாறவும் சூடான உருளை ஆம்லெட் தயார்.

  20. 20

    ஆறாவதாக முட்டைக் கோஸ் ஆம்லெட் ; தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், உப்புச் சேர்த்து வதக்கவும் பின் முட்டைக் கோசை நீள்வாக்கில் வெட்டிச் சேர்க்கவும்

  21. 21

    அதில் 1/4 ஸ்பூன் கரம்மசாலாச் சேர்த்து நன்றாக வதக்கவும் அதிலேயே வெந்து விட்டதும்

  22. 22

    பின் முட்டையை மேலேயே உடைத்து ஊற்றிக் கொண்டு ஸ்பூனால் பரப்பி விடவும் இருப்புறமும் வெந்ததும் பரிமாறவும் (குறிப்பு ; கல்லில் வேகவைத்த கிழங்கு, கோஸ் இரண்டிலும் முட்டை ஊற்றும் போது கலந்து விட்டு பின் பரப்பவும் இல்லை என்றால் கருகி விடுகிறது) முட்டைக்கோஸ் ஆம்லெட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes