சுவரொட்டி வறுவல்

Manickavalli M
Manickavalli M @Mani_2090

#wd மகளிர் தின வாழ்த்துக்கள் 💐இதை மாலதி அண்ணிக்காக டெடிகேட் செய்கிறேன். இந்த சுவரொட்டியில் இரும்பு தாது சத்துக்கள் அதிகம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2  நபர்கள்
  1. 2 ஆட்டு மண்ணீரல்
  2. ஒரு பெரிய வெங்காயம்
  3. 2 பச்சை மிளகாய்
  4. 5 டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள்
  5. ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள்
  6. ஒரு டேபிள்ஸ்பூன் சீரகத்தூள்
  7. இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  8. 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல்
  9. கைப்பிடி கொத்தமல்லி தழை
  10. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஆட்டு மண்ணீரலை நன்றாக கழுவி விட்டு அதில் மஞ்சள் தூள் சீரகத்தூள் சேர்த்துஅதை இட்லி பாத்திரத்தில் வைத்து 30 நிமிடங்கள் நன்றாக வேக வைத்து எடுத்து மேலே வெள்ளை வெள்ளையாக தெரியும் தோல்களை நீக்கி விட்டு சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இதை வேக வைத்த பின்பு தான் நறுக்க வேண்டும்.

  2. 2

    பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்

  3. 3

    நன்றாக வதங்கிய பிறகு அதனுடன் வேகவைத்த சுவரொட்டியை மிளகுத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி மசாலா ஒன்றாக சேர்ந்த பின் அதனுடன் தேங்காய் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manickavalli M
Manickavalli M @Mani_2090
அன்று

Similar Recipes