#np1 பச்சரிசி வெஜ் பிரியாணி

Sai's அறிவோம் வாருங்கள்
Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449

#பிரியாணி
பாஸ்மதி அரிசியில் செய்வது போன்ற சுவையான பச்சரிசி பிரியாணி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. பச்சரிசி - 200கி
  2. தயிர் - 100 கி
  3. தண்ணீர் - 300 மி.லி
  4. உப்பு,மஞ்சள்தூள், தனி மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள்
  5. தாளிப்பு
  6. சோம்பு,பட்டை, கிராம்பு, ஏலக்காய்,பிரியாணி இலை, தாமரை மொக்கு
  7. வதக்க
  8. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், குடை மிளகாய்
  9. நெய் - 2 ஸ்பூன்
  10. எண்ணெய் - 2 ஸ்பூன்
  11. காய்கறி
  12. கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பச்சை பட்டாணி

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    பச்சரிசியை 5 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் 2 ஸ்பூன் நெய், 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, சோம்பு பொரிய விடவும்

  3. 3

    பட்டை,தலை கிள்ளிய கிராம்பு, ஏலக்காய்,பிரியாணி இலை, தாமரை மொக்கு ஆகியவை போடவும்.

    பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்

  4. 4

    இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்

  5. 5

    வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

    குடை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்

  6. 6

    நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும்

  7. 7

    தேவையான அளவு உப்பு,மஞ்சள்தூள், தனி மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவை கலந்து விட வேண்டும்

  8. 8

    ஊறிய பச்சரிசி சேர்த்து வதக்கவும்

  9. 9

    தண்ணீர் விட்டு கலந்த பின்னர் தயிரை சேர்க்கவும்

  10. 10

    தீயை நன்றாக குறைத்து சிம்மில் மூடி 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.

  11. 11

    அவ்வப்போது திறந்து கிளறி விடவும்

  12. 12

    பாஸ்மதி அரிசியில் செய்வது போன்ற சுவையான பச்சரிசி பிரியாணி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sai's அறிவோம் வாருங்கள்
அன்று

Similar Recipes