சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும் இஞ்சி, பூண்டு விழுது செய்யவும்
- 2
முதலில் கடாயில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் குண்டு மல்லி, கடலைப்பருப்பு, வத்தல், கடலைப்பருப்பு,சீரகம், மிளகு, புளி, பூண்டு,பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கவும் கருகக் கூடாது
- 3
வதக்கியதும் அனைத்தும் ஆறவும் துவையல் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்
- 4
பின் ஒரு பாத்திரத்தில் இஞ்சிபூண்டு விழுது, மல்லிஇலை, புதீனாஇலைச் சேர்க்கவும்
- 5
அதில் தயிர், மஞ்சள்த்தூள், மல்லித்தூள்ச் சேர்க்கவும்
- 6
அதில் மிளகாய்த்தூள், பிரியாணித்தூள் மற்றும் நெய்ச் சேர்க்கவும்
- 7
அனைத்தையும் கலந்து வைத்துக் கொள்ளவும்
- 8
அரைத்து வைத்த மசாலாவை கத்தரிக்காய்களில் ஸ்டஃப் செய்யவும்
- 9
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி ஸ்டஃப் செய்த காய்களைச் சேர்த்து வதக்கவும்
- 10
வதங்கியதும் கலந்து வைத்த கலவையைச் சேர்த்துக் கொள்ளவும் உப்புச் சேர்த்து வதக்கி விடவும்
- 11
அனைத்தும் வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்
- 12
ஒருக்குக்கரீல் நெய் ஊற்றி அதில் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பூ மற்றும் வெங்காயம்ச் சேர்த்து வதக்கவும்
- 13
வதங்கியதும் தக்காளியை வதக்கவும் பின் கழுவி ஊறவைத்த அரிசியைச் சேர்க்கவும்
- 14
கலத்து விட்டு பின் அரிசிக் கேற்ப தண்ணீர் அளவாக ஊற்றிக்கொள்ள வேண்டும் பின் சாதாரன மூடியைக் கொண்டு மூடி வைத்துக் கொள்ளவும்
- 15
அரிசி 1/4 பதம் வேக வேண்டும் அது வரைப் பொறுத்திருக்கவும்
- 16
வெந்தப்பிறகு தயாரித்து வைத்திருந்த கத்தரி்க்காய் ஸ்டஃப் கலவையை போட வேண்டும் கலந்து விட்டுக் கொள்ளவும் பின் உப்புக்காரம் சரிப்பார்த்துக் கொள்ளவும்
- 17
பின் குக்கரை விசில்ப்போட்டு மூடிக் கொள்ள வேண்டும்
- 18
பின் எப்போதும் வைக்கும் விசில் அளவை விட குறைவாக வைக்க வேண்டும் நான் 1 வைத்தேன்
- 19
பின் பரிமாறவும் சுவையாக இருந்தது கத்தரிக்காய் பிரியாணித் தயார்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
*கத்தரிக்காய் தொக்கு*
இது நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலை குறைக்கும். சிறுநீரக கற்களை கரைக்கும் வலிமை பெற்றது. Jegadhambal N -
More Recipes
கமெண்ட் (4)