தேவையான பொருட்கள்

25 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2கப் வேக வைத்த சாதம்
  2. 1 எலுமிச்சம்பழம்
  3. 2டேபிள்ஸ்பூன் வறுத்த நிலக்கடலை
  4. 1டீஸ்பூன் கடுகு
  5. 1டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  6. 1டீஸ்பூன் கடலைப்பருப்பு
  7. ஒரு கொத்து கருவேப்பிலை
  8. 1 பச்சைமிளகாய்
  9. பெருங்காயத்தூள் சிறிதளவு
  10. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  11. உப்பு தேவையான அளவு
  12. கொத்தமல்லி சிறிதளவு
  13. 2டேபிள்ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை தயார் செய்து வைக்கவும். வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு,வறுத்த நிலக்கடலை, கறிவேப்பிலை தாளித்து பின் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

  2. 2

    பின்னர் வேக வைத்த சாதத்தை இதில் சேர்த்து கிளறி விடவும். எலுமிச்சை பழத்தில் கொட்டை எடுத்து சாறு பிழிந்து உப்பு கலந்த பிறகு கொத்தமல்லி சின்னதாக கட் செய்து இதில் சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கவும்.

  3. 3

    எளிமையான முறையில் எலுமிச்சம்பழ சாதம் சாப்பிட ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Anu kalai
Anu kalai @cook_29257238
அன்று

Similar Recipes