தயிர் வெண்டைக்காய்

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
Coimbatore

#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 நிமிடங்கள்
4 பேருக்கு
  1. 250 கிராம் வெண்டைக்காய்
  2. 4 டேபிள் ஸ்பூன் தயிர்
  3. ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. ஒரு டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  5. அரை டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
  6. அரை டேபிள்ஸ்பூன் சீரகத்தூள்
  7. அரை டேபிள்ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  8. கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. கடுகு
  10. உளுத்தம் பருப்பு
  11. 2 வெங்காயம்
  12. ஒரு தக்காளி
  13. இரண்டு பச்சை மிளகாய்
  14. தேவையானஅளவு சமையல் எண்ணெய்
  15. உப்பு

சமையல் குறிப்புகள்

1/2 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வெண்டைக்காயை கழுவி சிறிய சிறிய துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும் நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்

  2. 2

    பிறகு ஒரு சிறிய பாத்திரத்தில் 4 டேபிள்ஸ்பூன் தயிர் மிளகாய்த்தூள் கரம் மசாலா மல்லித்தூள் சீரகத்தூள் காஷ்மீரி மிளகாய்த்தூள் இதை அனைத்தையும் நன்கு கலந்துவிட வேண்டும்

  3. 3

    பிறகு ஒரு பானில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சிறிது மஞ்சள் தூள் காரத்திற்கு ஏற்றமாதிரி மிளகாய்த்தூள் இதைப் போட்டு நன்கு வதக்க வேண்டும் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்
    பச்சை வாசனை போன பிறகு நாம் கலந்து வைத்த தயிர் கலவையை அதில் சேர்க்கவேண்டும் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் ஊற்ற வேண்டும்

  4. 4

    பிறகு நாம் வதக்கி வைத்த வெண்டைக்காய் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவேண்டும் நன்கு கெட்டியான பிறகு சிறிது மல்லித்தழை தூவி இறக்கி விட வேண்டும்சுவையான தயிர் வெண்டைக்காய் ரெடியாகிவிட்டது ருசித்துப்பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Cookingf4 u subarna
அன்று
Coimbatore

Similar Recipes