உக்காரை

#Np2
இந்த ஸ்வீட் மிகவும் சுவையாக இருக்கும். இது செட்டிநாடு ஸ்பெசல்.
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பில் ஒரு இட்லி சட்டியை வைத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் இட்லி தட்டை வைத்து துணி போட்டு மூடி வைக்கவும்.இட்லி பாத்திரம் தண்ணீர் கொதி வந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் பாசிப் பருப்பை அதில் இட்லிகளாக ஊற்றி மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும். பிறகு அந்த இட்லி களை எடுத்து ஆறவைத்து சின்ன சின்ன துண்டுகளாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும்
- 3
இட்லி துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேங்காய் துருவல் போல அரைத்துக் கொள்ளவும்
- 4
ஒரு கப் சர்க்கரை, ஏலக்காயை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளவும்.
- 5
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பருப்புகளை அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
- 6
பிறகு அதே கடாயில் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்த பாசிப்பருப்பை அதில் போட்டு 5 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்.
- 7
பிறகு அதில் தேங்காய்த் துருவலைப் போட்டு 1 ஸ்பூன் நெய் ஊற்றி 5 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்
- 8
பிறகு சக்கரை பவுடரை அதில் போட்டு இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி 5 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்
- 9
பிறகு நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்புகளை அதில் போட்டு இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி 5 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும். பிறகு பரிமாறவும்
- 10
சுவையான உக்காரை தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீட்ரூட் டிரை ஜாமுன்


அசோகா அல்வா


பாசிப்பருப்பு இனிப்பு பேன் கேக்


மாம்பழ ரவா கேசரி


ட்விஸ்ட் ஸ்வீட்


ரவா கேசரி


சரவண பவன் கார பொங்கல்


கேசரி


மேகி பால் கொழுக்கட்டை


தினை பொங்கல்


உளுந்தங்கஞ்சி


அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)


தர்பூசணி பழ ஸ்வீட் (Tharpoosani pazha sweet recipe in tamil)


தேங்காய் பர்பி


பாசிப்பருப்பு பாயாசம்


தலைப்பு : ரோஸ் மில்க் கேக்


தேங்காய் பொட்டுக்கடலை பர்பி


ஆப்பிள் கேசரி (Apple kesari)


ஆப்பிள் கேசரி


அன்னாசி கேசரி பாத்


வெல்லம், தேங்காய் பர்பி (Jaggery, coconut burfi recipe in tamil)


பருப்பு பாயசம்


பொரிகடலை ஸ்விட் ஈவினிங் ஸ்நாக்ஸ்


ரவா பொங்கல் (Rawa pongal)


பாஸ்டா பால் பாயாசம்


சத்தான கார்ன்ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு


தேங்காய் கோல உருண்டை (Thenkaai kola urundai recipe in tamil)


சேமியா பாயாசம்


சர்க்கரை பொங்கல் /Sweet Pongal


சர்க்கரை வள்ளி கிழங்கு கீர்

கமெண்ட்