தர்பூசணி பழ ஸ்வீட் (Tharpoosani pazha sweet recipe in tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#Deepavali
#kids
தீபாவளிக்கு விதமான ஸ்வீட் செய்யலாம்.புதுவிதமான ஸ்வீட் செய்து அசத்தலாம். ஃபுட் கலர் எதுவும் சேர்க்காமல் இயற்கையான முறையில் இந்த ஸ்வீட் செய்யலாம்.நான் முதல் முறை இந்த ஸ்வீட் செய்துள்ளேன்.

தர்பூசணி பழ ஸ்வீட் (Tharpoosani pazha sweet recipe in tamil)

#Deepavali
#kids
தீபாவளிக்கு விதமான ஸ்வீட் செய்யலாம்.புதுவிதமான ஸ்வீட் செய்து அசத்தலாம். ஃபுட் கலர் எதுவும் சேர்க்காமல் இயற்கையான முறையில் இந்த ஸ்வீட் செய்யலாம்.நான் முதல் முறை இந்த ஸ்வீட் செய்துள்ளேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 கப் பால் பவுடர்
  2. 5 ஸ்பூன் நெய்
  3. 1 டம்ளர் பால்
  4. 1 கப் சர்க்கரை
  5. கலர்க்காக
  6. 1வாழை இலை
  7. 1 பீட்ருட்
  8. எள் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாழை இலையை நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்பு அதனை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அரைக்கவும். பச்சைக்கலர் காக நாம் வாழையிலை சேர்த்துக் கொள்கிறோம்

  2. 2

    ஒரு பீட்ரூட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். வடிகட்டியில் பீட்ரூட்டை போட்டு ஜூஸ் எடுத்துக் கொள்ளவும். சிவப்பு கலர்க்காக பீட்ரூட் எடுத்துள்ளோம்

  3. 3

    தேவையான பொருட்கள் அனைத்தையும் பக்கத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு கடாயில் 5 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் ஒரு டம்ளர் பால் சேர்த்து நன்றாகக் கிளறிக் கொள்ளவும்.

  5. 5

    நன்றாக கொதித்த பின்பு இனிப்புக்கு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும். கம்பி பதம் வர தேவை இல்லை.

  6. 6

    சர்க்கரை நன்றாக கரைந்ததும் பால்பவுடர் சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளவும். பால் பவுடர் அதிகம் வாங்க முடியாவிட்டால் அரை கப் பால் பவுடர் அரை கப் மைதா சேர்த்துக் கொள்ளலாம்.

  7. 7

    ஒரு 20 நிமிடம் நன்றாக அடிபிடிக்காமல், கேஸை சிம்மில் வைத்து கிளறிக்கொண்டே இருக்கவும். ஒரு கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்

  8. 8

    லேசான சூடு வரவும் மூன்று பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும்.

  9. 9

    முதலில் பச்சை கலர் வருவதற்காக எடுத்து வைத்துள்ள வாழையிலை ஜூஸை ஒரு பகுதியில் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தர்பூசணி வெளிப்புற தோற்றத்திற்கான பச்சை கலர் தயாராகிவிட்டது.

  10. 10

    பின்பு சிவப்பு கலர்க்காக பீட்ரூட் ஜூஸை இன்னொரு பகுதியில் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  11. 11

    மூன்றாவது பகுதியை அப்படியே வைத்துக் கொள்ளவும்.

  12. 12

    பச்சை மற்றும் வெள்ளை கலரை ஒரு பகுதியை எடுத்து உருட்டி கையில் வைத்து தட்டிக் கொள்ளவும்.படத்தில் காட்டியவாறு.

  13. 13

    முதலில் வெள்ளை கலர் பகுதியை எடுத்து நடுவில் சிவப்பு கலர் பால் கேக் கை வைத்து வெள்ளை பகுதியை மூடிக் கொள்ளவும். நன்றாக உருட்டிக் கொள்ளவும்.

  14. 14

    பச்சை கலர் பால் கேக்கை எடுத்து அதன் மேல் ஏற்கனவே செய்துள்ள வெள்ளை உருண்டையை நடுவில் வைத்து மூடிக்கொள்ளவும்.நன்றாக உருட்டிக் கொள்ளவும்.

  15. 15

    கத்தியில் சிறிதளவு நெய் தடவி உருண்டையை இரண்டு பகுதிகளாக வெட்டி கொள்ளவும். பின்பு ஒரு பகுதியை தர்பூசணி பழம் வெட்டுவது போல் வெட்டிக் கொள்ளவும்.

  16. 16

    தர்பூசணி பழத்தின் விதைகள் இருப்பது போல் இதற்கு தோற்றமளிக்க கருப்பு எள் மேலே வைத்துக் கொள்ளவும்.

  17. 17

    சுவையான கலர்ஃபுல்லான வித்தியாசமான தர்பூசணி பல ஸ்வீட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
அன்று
Pandhalkudi

Similar Recipes