எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2கப் தோசை மாவு
  2. 2 வெங்காயம்
  3. 8 தக்காளி
  4. 6பல் பூண்டு
  5. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 2ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1/2ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  8. தேவையானஅளவு உப்பு
  9. 1/4ஸ்பூன் சர்க்கரை
  10. 2டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் தாளித்து பூண்டு பல் சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பிறகு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.

  3. 3

    அடுப்பை குறைவாக தீயில் வைத்து பிறகு மிளகாய்த்தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து கொள்ளவும்.

  4. 4

    தக்காளி நன்கு மசிந்து வந்த பிறகு தேவைப்பட்டால் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு சர்க்கரை சிறிதளவு சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். சூப்பரான தக்காளி கடையல் தயார். நன்றி

  5. 5

    அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடாக வந்ததும் லேசாக எண்ணெய் தடவி விட்டு ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி தேய்த்து சுற்றி எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.

  6. 6

    தோசை நன்கு பொன்னிறமாக வந்ததும் எடுத்து கொள்ளவும். சுவையான தோசை மற்றும் தக்காளி கடையல் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes