சமையல் குறிப்புகள்
- 1
200 கிராம் அணில் சேமியா ஒரு பாக்கெட் எடுத்துக் கொள்ளவும்.(2 தும்ளர் அளவு வரும்).நான்கு ஸ்பூன் அளவிற்கு ரவை எடுத்துக் கொள்ளவும். ஒரு நான் ஸ்டிக் வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சேமியாவை சூடு ஏற லேசாக சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
- 2
வறுத்த சேமியாவை உடனே வேறு ஒரு தட்டிற்கு மாற்றி விடவும். ஒரு சிறிய கப்பில் கால் அளவிற்கு ரவை எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் சன்னமாக அறிந்து கொள்ளவும். பச்சை மிளகாயும் அதேபோல் அரிந்து கொள்ளவும். இரண்டு வரமிளகாய் எடுத்துக் கொள்ளவும் கொத்தமல்லி கருவேப்பிலை தலையை அரிந்து வைத்துக்கொள்ளவும்.
- 3
அதே நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வர மிளகாய்,, பச்சை மிளகாய், வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் ஓரளவு வதங்கிய பின்பு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து வெங்காயத்தை முக்கால் அளவிற்கு வேகவிடவும். வெங்காயம் வெந்த உடன் அதில் ஒரு டம்ளர் சேமியா விற்கு ஒரு டம்ளர் தண்ணீர் விகிதம் இரண்டு டம்ளர் தண்ணீரும்+கால் கப் ரவைக்கு அரை டம்ளர் தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 4
தண்ணீர் கொதித்த உடன் வறுத்த சேமியாவை கொட்டவும். அதனுடனே கால் கப் ரவையை சேர்த்து கட்டி இன்றி நன்கு கிளறி விடவும்.உடனே இப்போது அடுப்பை நிறுத்தி விடவும். மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும். கடைசி படத்தில் உள்ளபடி சேமியா மலர்ந்து வெந்து இருக்கும். தண்ணீர் சுண்டி இழுக்கும்.
- 5
உடனே மூடியைத் திறந்து மேலும் சிறிது நெய்யும் எண்ணெயும் சேர்த்து நன்கு கரண்டி கொண்டு கிளறி விடவும். மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.சேமியா இப்போது நன்கு வெந்து பளபளவென்று உதிரியாக இருக்கும். குழந்தைகளுக்கு ஸ்பூன் போட்டு கொடுத்தால் அப்படியே எடுத்து சாப்பிடும் அளவிற்கு குழகுழப்பு இல்லாமல் இருக்கும். நன்கு உதிரியாக இருக்கும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும். இதற்கு சட்னி சாம்பார் சரியான ஜோடி. சர்க்கரையும் தொட்டு சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
👭🟤எலந்த வடை👭🟤
#wd இந்த மகளிர் தினத்தில் என் தோழி பிரியாவிற்காகஇதை நான் டெடிகேட் செய்கிறேன் . எலந்தை வடை எங்கள் பள்ளி கால பருவத்தை நினைவு கூறுகிறது. 👭👭 Hema Sengottuvelu -
-
-
-
உளுந்து வெங்காய வடை
#Np3விரதத்திற்கு , படையலுக்கு வெங்காயம் சேர்க்காமல் மெது வடை செய்வோம்.மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இன்று நான் வெங்காயம் சேர்த்து கடையில் விற்பது போல செய்தேன்.வெங்காய வாசத்துடன் வடை ருசியாக இருந்தது. Meena Ramesh -
-
-
டயட் கோதுமை ரவை உப்புமா
#everyday3சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.வயதானவர்களுக்கும்,உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற டயட் உப்புமா. Meena Ramesh -
Hotel style tomoto chutney
#hotelஹோட்டல் சுவை கொண்ட தக்காளி சட்னி இது. எளிதாக செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
🥣🥣சேமியா கீர் 🥣🥣 (Semiya kheer recipe in tamil)
#Grand2 புத்தாண்டுக்காக என் மகள் செய்த ரெசிபி. Hema Sengottuvelu -
-
தக்காளி சேமியா கிச்சடி/tomoto
#lockdown2 #golden apron 3 #bookவீட்டில் இருந்த தக்காளி, கேரட், பீன்ஸ், குடமிளகாய் வைத்து செய்தேன். பட்டாணி சேர்த்தால் நன்றாக இருக்கும். ஆனால் அது மார்கெட்டில் தான் கிடைக்கும். கொரோன தொற்று பயத்தால் வெளியில் சென்று எதுவும் வாங்குவதில்லை. தெருவில் விற்று செல்லும் காய்களை மட்டும் வாங்கி சமையல் செய்து வருகிறேன். நாமும் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் அல்லவா? Meena Ramesh -
-
-
தயிர் சேமியா (Thayir semiya recipe in tamil)
தயிர் சேமியா, வெயில்லுக்கு ஏற்ற உணவு. இது கோவை ஸ்பெஷல். குளிர் சாதன பெட்டியில் குளிர வைத்து சாப்பிடலாம் #அறுசுவை4 Sundari Mani -
சேமியா உப்புமா
#Lockdown 1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .சேமியா ,ரவை கோதுமை மாவு வாங்கி வந்தோம். சேமியா 1 பாக்கெட் வைத்து உப்புமா செய்தோம் . Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)