வாழைப்பழ பான் கேக்

Sara's Cooking Diary
Sara's Cooking Diary @Rayeeza
Madurai
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 நபர்கள்
  1. 2 கப் கோதுமை மாவு
  2. 4 சிறிய வாழைப்பழங்கள்
  3. 5 முட்டை
  4. 1 சிட்டிகை ஆப்ப சோடா
  5. 1 கப் சர்க்கரை அல்லது நாட்டுச்சக்கரை
  6. 1/2 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  7. தேவையானஅளவு தண்ணீர்
  8. சிறிதளவுநெய்
  9. சிறிதளவுதேன்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு பௌலில் ஐந்து முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    அதன் பிறகு வாழைப்பழம் மற்றும் சர்க்கரையை மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து அதை முட்டையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

  3. 3

    அதன்பிறகு கலந்த மாவில் வெனிலா எசன்ஸ் மற்றும் ஆப்பசோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

  4. 4

    பிறகு இரண்டு கப் கோதுமை மாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

  5. 5

    அதன் பிறகு மாவை மூடி வைத்து அரை மணி நேரம் வைக்க வேண்டும்.

  6. 6

    பிறகு ஒரு பானில் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்ற வேண்டும். சிறிதளவு நெய் சேர்க்க வேண்டும்.

  7. 7

    ஒரு புறம் நன்கு வெந்தவுடன் மறுபுறம் திருப்பி போட வேண்டும். இருபுறமும் நன்கு வெந்தவுடன் ஒரு ப்ளேட்டில் மாற்றி அதன் மேல் சிறிதளவு தேன் ஊற்ற வேண்டும்.

  8. 8

    மிகவும் சுவையான வாழைப்பழ பான் கேக் சுலபமாக தயாராகிவிட்டது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sara's Cooking Diary
அன்று
Madurai

Similar Recipes