பொட்டுக்கடலை சாம்பார்

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533

Everyday Recipe
இந்த சாம்பார் ஈசியா செய்யலாம். 10 நிமிடத்தில் ரெடி பண்ணிரலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பரிமாறுவது
  1. பொட்டுக்கடலை 100கிராம்
  2. 1 சில் தேங்காய்
  3. தக்காளி 2
  4. பச்சை மிளகாய் 2
  5. கொத்தமல்லி இலை
  6. மல்லி தூள் 3 டேபிள்ஸ்பூன்
  7. 2பட்டை 3 கிராம்பு 2ஏலக்காய் 2 பிரியாணி இலை
  8. இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
  9. எண்ணெய் 2டேபிள் ஸ்பூன்
  10. உப்பு
  11. தண்ணீர்
  12. 1 வெங்காயம்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் போடவும் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  2. 2

    2 நிமிடம் வதக்கவும் பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  3. 3

    பிறகு அதில் தக்காளி ப.மிளகாய் கொத்தமல்லி இலை உப்பு போட்டு வதக்கவும்

  4. 4

    ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் பொட்டுக்கடலை தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  5. 5

    மல்லி தூள் சேர்த்து வதக்கவும் பிறகு அதில் 1கப் தண்ணீர் ஊற்றிய பிறகு அரைத்த விழுதை இதில் சேர்க்கவும்

  6. 6

    பொட்டுக்கடலை சேர்த்துக் கொண்டதால் கெட்டியாக வரும் தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து கொள்ளவும்

  7. 7

    நல்ல 2, 3,கொதி வந்த பிறகு அடுப்பை அணைத்து விடவும்

  8. 8

    சுவையான பொட்டுக்கடலை சாம்பார் ரெடி. சப்பாத்தி இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான பொட்டுக்கடலை சாம்பார் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533
அன்று

Similar Recipes