Veg Shorba/ veg gravy for pulav and biryani.😋

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

# cook with friends
Friend: Lakshmi sridharan
நானும் குக் பாட் அறிமுகப்படுத்திய அருமை அமெரிக்க வாழ் தோழி லக்ஷ்மி ஸ்ரீதரன் அவர்களும் மூன்றாவது cook with friends போட்டிக்கு என்ன செய்வது என்று கலந்துரையாடி அவர்கள் பீஸ் புலாவ் செய்வதாகவும் நான் அதற்கு ஏற்ற ஒரு கிரேவி செய்வதற்கும் பேசிக்கொண்டோம். இந்த ஷோர்பா கிரேவி, புலாவ் மற்றும் வெஜிடபிள் பிரியாணிக்கு ஏற்ற ஜோடி. மிகவும் அருமை யாக இருந்தது. இன்னும் தோழி செய்திருந்த புலாவ் இருந்திருந்தால் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக உண்டு ரசித்திருப்போம். நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். அனைத்து குக் பாட் தோழிகளுக்கும் உலக நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.'Happy Friendship Day'🤝💐👩‍🍳

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 2டேபிள் ஸ்பூன் வெள்ளை எள்ளு
  2. 2டேபிள்ஸ்பூன் கொப்பரைத் தேங்காய் துண்டுகள
  3. 2டேபிள்ஸ்பூன் நிலக்கடலை
  4. 1/2பெரிய வெங்காயம்
  5. 1தக்காளி
  6. 2 டேபிள்ஸ்பூன் புதினா
  7. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  9. 1பிரிஞ்சி இலை
  10. 2ஏலக்காய்
  11. 1இன்ச் பட்டை
  12. 1ஸ்பூன் சீரகம்
  13. 3/4ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள்
  14. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  15. 1/2ஸ்பூன் கொத்தமல்லி தூள்
  16. 1/4ஸ்பூன் சீரக தூள்
  17. 1)2ஸ்பூன் கரம் மசாலா தூள்
  18. 1ஸ்பூன் உப்பு
  19. 1 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மேற்கூறிய பொருட்களை தயார் படுத்தி எடுத்து வைத்துக் கொள்ளவும்.2 டேபிள்ஸ்பூன் நிலக்கடலையை சூடான வாணலியில் தோல் நீங்கும் அளவிற்கு நன்கு வறுத்துக் கொள்ளவும். அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் பொடியாக அரிந்த கொப்பரை தேங்காய் மற்றும் 2 டேபிள்ஸ்பூன் எள் சேர்த்து சிவக்க வறுக்கவும். இவற்றை மிக்ஸியில் பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்

  2. 2

    பிறகு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் அரிந்த அரை பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். இதனுடன் நறுக்கிய ஒரு தக்காளி மற்றும் 2 டேபிள் ஸ்பூன் புதினா சேர்க்கவும். நன்கு வதங்கும் வரை வதக்கி கொள்ளவும். ஆற வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    வெங்காய தக்காளி நன்கு ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து அதனுடன் வறுத்து பொடி செய்த எள்ளு கடலைக் கொட்டை கொப்பரை தேங்காய் பவுடர் சேர்த்துக் கொள்ளவும். கால் டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் நன்றாக எல்லாவற்றையும் அரைத்துக் கொள்ளவும்.இப்போது ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு பிரிஞ்சி இலை, ஒரு இன்ச் அளவு பட்டை, 2 ஏலக்காய், ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இவற்றுடன் அரைத்த விழுதை சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு வதக்கி கொள்ளவும்.

  4. 4

    நன்கு நிறம் மாறி வதங்கியவுடன் அதில் எடுத்து வைத்த கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் கொத்தமல்லி தூள், முக்கால் ஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் சீரகத்தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா தூள், ஒரு ஸ்பூன் உப்புத்தூள் சேர்த்து நன்கு கலந்து விட்டு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். பத்து நிமிடங்கள் போதுமானது.

  5. 5

    பத்து நிமிடம்கொதித்தவுடன் கலவை ஓரளவிற்கு கெட்டியாகும். அப்போது அடுப்பை நிறுத்தி விடவும். இறுதியில் பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை சேர்த்து அலங்கரிக்கவும். உப்பு உங்களுக்கு தேவையான அளவிற்கு சேர்த்துக் கொள்ளலாம். இந்த குழம்பு பூரி சப்பாத்திக்கும் மிகவும் நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes