மாங்காய் துவையல்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

சைவ விருந்து பகுதியில் மாவடுவை வைத்து துவையல் ஒன்று செய்திருந்தார்கள் நான் அதை சிறிது மாற்றி கிளி மூக்கு மாங்காயில் துவையல் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து மாங்காயில் துவையல் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது இந்த துவையலை சாதத்தில் நெய் விட்டு தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம் வைத்து சாப்பிட்டால் சுவையோ அபாரம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

கால் மணி
நான்கு பேர்
  1. கிளிமூக்கு மாங்காய் ஒன்று
  2. நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  3. கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
  4. உளுத்தம் பருப்பு ரெண்டு ஸ்பூன்
  5. மிளகாய் 8
  6. கருவேப்பிலை ஒரு ஆர்க்குகல்லுப்பு தேவையான அளவு
  7. தாளிக்க நல்லெண்ணெய் ஒரு டீஸ்பூன்
  8. கடுகு கால் டீஸ்பூன்
  9. உளுத்தம் பருப்பு ஒரு டீஸ்பூன்
  10. பெருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

கால் மணி
  1. 1

    கடாயில் சிறிது நல்லெண்ணை விட்டு துண்டுகளாக நறுக்கின மாங்காயை வதக்கிக் கொள்ளவும்

  2. 2

    திரும்பவும் சிறிது நல்லெண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு மிளகாய் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்

  3. 3

    வதக்கிய மாங்காயுடன் வறுத்த பருப்புகளுடன் கல்லுப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    சிறிது நல்லெண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை பெருங்காயம் தாளித்து துவையலில் கொட்டவும்

  5. 5

    இந்த மாங்காய் துவையல் மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு சுட்ட அப்பளத்தை தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் சுவை கூடும் இதை அனைவரும் செய்து பார்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes