எலுமிச்சை ரசம்

Sai's அறிவோம் வாருங்கள்
Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449

#refresh1

•சீரகம், மிளகு - செரிமானத்திற்கு உதவும்
•பருப்பில் புரத சத்து அதிகம் உள்ளது
•பூண்டு இருதயத்திற்கு நல்லது
•இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது
•இவையுடன் எலுமிச்சை சாறிலுள்ள சிட்ரிக் சேர்ந்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

தினசரி உணவில் ரசம் சேர்த்துக் கொள்ள உடல் வலு அதிகரிக்கும், செரிமான பிரச்சனைகள் வராது. வயிற்றுக்கும் இதமாக இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. ரசப்பொடி
  2. 2 கப் மல்லி
  3. 1 கப் மிளகு
  4. 1 கப் சீரகம்
  5. 5 காய்ந்த மிளகாய்
  6. 1/2 கப் துவரம்பருப்பு
  7. ரசம் செய்ய
  8. 2 தேக்கரண்டி வேக வைத்த துவரம்பருப்பு
  9. 1 தக்காளி
  10. 1 பச்சை மிளகாய்
  11. தேவையானஅளவு உப்பு
  12. மஞ்சள்தூள்
  13. 1/4 தேக்கரண்டி சாம்பார் மிளகாய்த்தூள்
  14. 1 டம்ளர் தண்ணீர்
  15. 1 தேக்கரண்டி ரசப்பொடி
  16. 4 பற்கள் பூண்டு
  17. 1/2 மூடி எலுமிச்சை
  18. தாளிக்க
  19. 1/4 தேக்கரண்டி கடுகு
  20. 1/4 தேக்கரண்டி சீரகம்
  21. பெருங்காயத்தூள்
  22. கறிவேப்பிலை
  23. பச்சை கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் ரசப்பொடிக்கு தேவையான பொருட்களை ஒவ்வொன்றாக தனி தனியே வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    மல்லி - நிறம் மாற
    மிளகு - வெடிக்க
    சீரகம் - பொறிய
    துவரம்பருப்பு - சிவக்க
    மிளகாய் - நிறம் மாற

    வறுக்கவும்

  3. 3

    சூடு குறைந்ததும் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    சிறிய பாத்திரத்தில் சேமித்து ஒரு மாதக் காலத்திற்கு பயன்படுத்தலாம்.

  4. 4

    வேக வைத்த பருப்பில் தண்ணீர் விட்டு கரைத்து பருப்பு தண்ணீர் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்

  5. 5

    நறுக்கிய தக்காளி சேர்த்து, தேவையான அளவு உப்பு மஞ்சள்தூள் ஆகியவை சேர்க்கவும்

  6. 6

    பச்சை மிளகாய் வகுந்து சேர்க்கவும், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்

  7. 7

    பூண்டு பற்களை தோல் நீக்கி, நசுக்கி ரசத்தில் சேர்க்கவும்

  8. 8

    ரசப்பொடி சேர்த்து தக்காளி வேகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்

  9. 9

    அரை மூடி எலுமிச்சை சாறு பிழியவும்

  10. 10

    எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து ரசத்தில் சேர்க்கவும்

  11. 11

    கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி சாதத்துடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sai's அறிவோம் வாருங்கள்
அன்று

Similar Recipes