ரோட்டுக்கடை பூண்டு பொடி

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
Coimbatore

#vattaram சென்னையில் ரோடு சைடு கடையில் பூண்டு பொடி மிகவும் பிரபலமான ஒன்று

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
10 பேருக்கு
  1. 250 பூண்டு
  2. 100கிராம் வர மிளகாய்
  3. 3டேபிள்ஸ்பூன் வரமல்லி
  4. கால் மூடி தேங்காய்
  5. 2டேபிள் ஸ்பூன் சீரகம்
  6. தேவையானஅளவு பெருங்காயம்
  7. சிறியஎலுமிச்சை அளவு புளி
  8. 50கிராம் உளுந்தம் பருப்பு
  9. உப்பு
  10. சமையல் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் தோலுடன் பூண்டை ஒன்றிரண்டாக நசுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்
    பிறகு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி தோல் நசுக்கப்பட்ட பூண்டை நன்கு வதக்கி ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    பிறகு அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு 15 வரமிளகாயை காரத்துக்கு ஏற்றாற்போல் நாம் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும் பிறகு அதை கடாயில் எண்ணெய் ஏதும் ஊற்றாமல் உளுந்தம் பருப்பை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    பிறகு வரமல்லி சீரகத்தையும் ஒன்றாக வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும் பிறகு பெருங்காயத்தையும் புளியையும் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  4. 4

    கடைசியாக துருவி வைத்த தேங்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும் நீர் பசையில்லாத வரை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  5. 5

    இப்போது மிக்ஸி ஜாரில் நாம் வதக்கி வைத்த சில பொருட்களை போட்டு முதலில் அழைக்கவேண்டும் முதலில் வரமிளகாய் சீரகம் மல்லி பெருங்காயம் புளி உளுத்தம் பருப்பு இதை அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்

  6. 6

    பிறகு இத்துடன் பூண்டையும் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்
    கடைசியாக நம் தேங்காயை வறுத்து வைத்த தேங்காயை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு ஓடவிட வேண்டும் தேங்காய் கடைசியில் போட வேண்டும்

  7. 7

    இப்போது நன்கு அரைக்கப்பட்ட பூண்டு பொடி தயார் ஆகிவிட்டது ஒரு மாதம் வெளியில் வைத்தாலும் கெட்டுப் போகாத இந்த பூண்டு பொடி மிகவும் ருசியாகவும் இருக்கும் நீங்களும் செய்து பார்த்து கூறுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Cookingf4 u subarna
அன்று
Coimbatore

Similar Recipes