தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 நபர்
  1. கத்தரிக்காய் -1
  2. உருளைக்கிழங்கு -1
  3. பச்சைமிளகாய் -1
  4. தக்காளி -2
  5. பெரிய வெங்காயம் -1
  6. துவரம்பருப்பு -1 கைப்பிடி
  7. பாசிப்பருப்பு - 1 1/2 கைப்பிடி
  8. உப்பு - தேவையான அளவு
  9. சாம்பார் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
  10. கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன்
  11. கடலைப் பருப்பு -1 டீஸ்பூன்
  12. காய்ந்த மிளகாய் -4
  13. சீரகம் - 1 டீஸ்பூன்
  14. எண்ணெய் - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின் காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    அதில் சாம்பார் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    அதில் துவரம்பருப்பு 1 கைப்பிடி, பாசிப்பருப்பு 1 1/2 கைப்பிடி சேர்க்கவும். அதில் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து, 2 விசில் விட்டு அடுப்பை சிமில் வைத்து 1 விசில் விட்டு இறக்கவும்.

  4. 4

    கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகாய், கடலைப்பருப்பு,
    கொத்தமல்லி விதை, இதனை தனித்தனியே வறுக்கவும்.

  5. 5

    குக்கரை திறந்து அரைத்து வைத்த பொடி சேர்த்து இறக்கவும்.இட்லி சாம்பார் ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nithya Lakshmi
Nithya Lakshmi @cook_nithya
அன்று
Kumbakonam

Similar Recipes