தேவையான பொருட்கள்

30நிமிடம்
2பேர்
  1. 3பெரிய உருளைக்கிழங்கு
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 3 பச்சை மிளகாய்
  4. 1/2துண்டு இஞ்சி
  5. 2 காய்ந்த மிளகாய்
  6. 1 டீஸ்பூன் சோம்பு
  7. 1டீஸ்பூன் கடுகு
  8. 1கைப்பிடி கறிவேப்பிலை
  9. 1/2டீஸ்பூன் சோம்பு தூள்
  10. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 3டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை
  12. 1டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  13. 1டீஸ்பூன் கடலைப்பருப்பு
  14. 1கைப்பிடி கொத்தமல்லி தழை
  15. உப்பு
  16. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    உருளைக்கிழங்குகளை தனியாக வேகவைத்து மசித்து கொள்ளவும். பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் இல்லாமல் நன்கு அரைத்து கொள்ளவும்.

  2. 2

    பின் அதனை தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.

  3. 3

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சோம்பு தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி, கா.மிளகாய், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஏற்கனவே கரைத்து வைத்த பொட்டுக்கடலை மாவையும்,மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

  4. 4

    உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பின் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து, சிறிது சோம்பு தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

  5. 5

    நன்கு கொதித்ததும், சிறிது கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes