தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4பேர்
  1. 1கப் துவரம்பருப்பு
  2. 1/4கப் பாசிப்பருப்பு
  3. 1டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  4. 1டீஸ்பூன் சீரகம்
  5. 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 2பெரிய வெங்காயம்
  7. 1தக்காளி
  8. 1 முருங்கைக்காய்
  9. 2 தலா கேரட், கத்திரிக்காய்
  10. 10 பீன்ஸ்
  11. 2 பச்சை மிளகாய்
  12. 2 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்
  13. 2டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி
  14. 1டீஸ்பூன் சீரகத்தூள்
  15. 1டீஸ்பூன் தனியாத்தூள்
  16. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  17. 1 எலுமிச்சை அளவு புளிக்கரைசல்
  18. தாளிக்கவும்:
  19. 2டீஸ்பூன் கடுகு,உளுத்தம்பருப்பு
  20. 2 வரமிளகாய்
  21. 1 கைப்பிடி கறிவேப்பிலை
  22. 1கைப்பிடி கொத்தமல்லி இலை
  23. எண்ணெய்
  24. உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் குக்கரில் பாசிப்பருப்பை லேசாக வறுத்து கொள்ளவும். அதில் துவரம்பருப்பு சேர்த்து தண்ணீர் விட்டு மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேக வைக்கவும்.

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். தக்காளியை சேர்த்து வதங்கியதும் காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    காய்கறிகள் வதங்கியதும், சிறிது தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேகவைக்கவும். அதில் மிளகாய் தூள், சாம்பார் பொடி, தனியாத்தூள், மல்லித்தூள் சேர்த்து வேகவிடவும்

  4. 4

    வேகவைத்த பருப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

  5. 5

    புளிக்கரைசல் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க விடவும்.காய்கறிகள் நன்கு வேகவிடவும்.

  6. 6

    வேறொரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes