வெள்ளை குருமா🍲🍲

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#combo2 பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

வெள்ளை குருமா🍲🍲

#combo2 பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 2- வெங்காயம்
  2. 1 தே.க - நெய்
  3. 2- கேரட்
  4. 10- பீன்ஸ்
  5. 1- உருளை கிழங்கு
  6. 1/4 கப் - பட்டாணி
  7. 1 மேஜைக்கரண்டி- இஞ்சி பூண்டு விழுது
  8. சிறிதளவு- கறிவேப்பிலை
  9. கொத்துமல்லி தழை
  10. தேங்காய் விழுது அரைப்பதற்கு
  11. அரை மூடி- தேங்காய்
  12. 4 - பச்சை மிளகாய்
  13. 1 மேஜைக்கரண்டி - பொட்டுக்கடலை
  14. சிறியதுண்டு- பட்டை
  15. 1 தே.க - சீரகம்
  16. 1 தே.க - சோம்பு
  17. 4- கிராம்பு
  18. 1- ஏலக்காய்
  19. 10- முந்திரி பருப்பு அல்லது 1 மேஜைக்கரண்டி வேர்கடலை
  20. கரம் மசாலா பொருட்கள்
  21. 3- கிராம்பு
  22. 2- ஏலக்காய்
  23. 1 தே.க - சோம்பு
  24. சிறியthundu- பட்டை
  25. 5- பிரிஞ்சி இலை

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் கரம் மசாலா பொருட்களை சேர்த்துக் மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.

  2. 2

    அதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதமாகும் வரை வதக்கவும். பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

  3. 3

    நன்றாக வதங்கியதும் கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், (ஊற வைத்து வேக வைத்த) பட்டாணி சேர்த்து 2 நிமிடம் வதக்கியதும் காய்கறிகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். (விருப்பத்திற்கேற்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்)

  4. 4

    தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

  5. 5

    தேங்காய் விழுது அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை கலவை இயந்திரத்தில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். (பச்சைமிளகாயை வதக்கி சேர்க்கவும்.)

  6. 6
  7. 7

    வித்தியாசமான சுவையில் அனைத்துக்கும் ஏற்ற சைட் டிஷ் ஆக வெள்ளை குருமா தயார்.

  8. 8
எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes