முட்டை குருமா / Egg curry receip in tamil

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana

#ilovecooking
hotel taste ல சுவையாக இருக்கும்

முட்டை குருமா / Egg curry receip in tamil

#ilovecooking
hotel taste ல சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 6 அவித்த முட்டை
  2. 3 பெரிய வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 1/2 கப் தயிர்
  5. 1பட்டை,4 கிராம்பு,1 பிரிஞ்சி இலை, 2 ஏலக்காய்
  6. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1 ஸ்பூன் சீரகம்
  8. 1 கொத்து கருவேப்பிள்ளை
  9. 1/2ஸ்பூன் மஞ்சள்த்தூள், 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  10. 4 ஸ்பூன் மல்லித்தூள், 2 ஸ்பூன் கரம் மசாலா
  11. 1/2 ஸ்பூன் மிளகுத்தூள்
  12. தேவையான அளவு எண்ணெய், தண்ணீர், உப்பு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    தேவையானப் பொருள்களை எடுத்துக் கொண்டு 1 1/2 வெங்காயத்தை பெரிதாகவும் 1 1/2 வெங்காயத்தை சிறிதாகவும் வெட்டிக் கொள்ளவும்

  2. 2

    கருவேப்பிள்ளையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும் பின் முட்டையை அவித்து எடுத்துக் கொள்ளவும் அதில் 4 கீரல்கள்ப் போட்டுக் கொள்ளவும்

  3. 3

    பின் மசால் தயாரிக்கலாம் ஒரு மிக்ஸி ஜாரில் 1 1/2 வெங்காயம், 2 தக்காளி, 1/2 கப் தயிர்ச் சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    அரைக்க தண்ணீர் தேவைப்படாது paste ஆக அரைத்து வைத்துக் கொள்ளவும்

  5. 5

    பின் ஒருக் குக்கரீல் எண்ணெய் ஊற்றி 1 பிரீஞ்சி இலை, 4 கிராம்பு

  6. 6

    1 பட்டை, 2 ஏலக்காய்,1 ஸ்பூன் சீரகம்ச் சேர்த்து பொறிய விடவும்

  7. 7

    பின் சிறிதாக நறுக்கிய 1 1/2 வெங்காயம், 1 ஸ்பூன் இஞ்சிப்பூண்டு விழுதுச் சேர்த்துக் கொள்ளவும் பின் தேவைக்கேற்ப உப்புச் சேர்த்து வதக்கவும்

  8. 8

    பிறகு அரைத்து வைத்த வெங்காயம்,தக்காளி, தயிர் கலவையைச் சேர்த்து வதக்கவும் பின் 1ஸ்பூன் மிளகாய்த்தூள், 2 ஸ்பூன் மல்லித்தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள்ச் சேர்த்துக் கொள்ளவும் 1 ஸ்பூன் கரம் மசாலா

  9. 9

    பின் மிக்ஸிஜாரில் தேவைக்கேற்ப தண்ணீர்ச் சேர்த்து ஊற்றிக் கொண்டு பின் ஒருக் கொத்து கருவேப்பிள்ளையைச் சேர்த்துக் கொள்ளவும்

  10. 10

    குக்கரை மூடி 3 விசில் வரை விடவும் பிறகு ஆவிப் போனதும் குக்கரைத் திறக்கவும்

  11. 11

    பின்பு ஒரு கப்பில் 1 ஸ்பூன் மிளகாய்த்தூள், 2 ஸ்பூன் மல்லித்தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள்

  12. 12

    1 ஸ்பூன் கரம் மசாலா, 1/2 ஸ்பூன் மிளகுத்தூள் எடுத்து கொள்ளவும்

  13. 13

    ஒருக் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் எடுத்து வைத்த மசாலாக்களைச் சேர்த்துக் கொள்ளவும் கண்டிப்பாக அடுப்பு sim ல் இருக்க வேண்டும் பின் மசாலாக்களில் முட்டைகளைச் சேர்த்து உடையாமல் பிரட்டி விடவும் அதிக நேரம் விடக்கூடாது முட்டை கடினமாகி விடும்

  14. 14

    பிரட்டியதும் குக்கரீல் உள்ள குழம்புக் கலவையைச் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும் முட்டைகளில் கீரல்கள் போட்டதால் மசாலாக்கள் நன்றாக உள்ளே இறங்கும்

  15. 15

    மூடி வைத்து கொதிக்க விடவும் பின் கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்

  16. 16

    பின் சூடாக பரிமாறவும் சுவையான மணமான முட்டைக் குருமா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
அன்று

Similar Recipes