கேரளா ஸ்டைல் மட்டன் ஸ்டியூ

#combo2
தேங்காய் பால் மற்றும் தேங்காய் எண்ணையின் சுவை கலந்த இந்த மட்டன் ஸ்டியூ மிகவும் ருசியாக இருக்கும். ஆப்பம் மற்றும் இடியாப்பத்திற்கு பொருத்தமாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
மட்டன் ஸ்டியூ செய்யும் பொழுது மட்டனை பசும்பாலில் கொதிக்க விட்டு, பாலை வடித்தபின் சமைக்க ஆரம்பித்தால் ருசி கூடுதலாக இருக்கும். இது போல நானும் பசும்பாலில் 5 நிமிடம் கொதிக்க வைத்த மட்டனை குக்கரில் சேர்த்துள்ளேன். பாலை வடித்து விட்டு மட்டன் துண்டுகளை மட்டும் குக்கரில் சேர்க்க வேண்டும். கூடவே ஒரு உருளைக்கிழங்கு கருவேப்பிலை ஒரு கொத்து, மட்டன் மூழ்கும் வரை தண்ணீர், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தபின் 10 நிமிடங்கள் குறைவான தீயில் வேக வைத்து கொள்ளவும்.
- 2
வெந்த உருளைக்கிழங்கை தனியாக எடுத்து தோலுரித்துக் கொள்ளவும். தேங்காயை துருவி அரைத்து, முதல் பால் ஒரு கப் மற்றும் இரண்டாம் பால் ஒன்றரை கப் அளவு எடுத்துக் கொள்ளவும். வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து தேங்காயின் முதல் பாலில் சேர்த்து கலந்து வைக்கவும். உருளைக்கிழங்கு சேர்ப்பதனால் ஸ்டியூ கொஞ்சம் கெட்டியாக வரும்.
- 3
ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடு செய்யவும். இதில் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை கல்பாசி அன்னாசிப்பூ பச்சை மிளகாய் சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். இஞ்சியை மெலிதாக நீளவாக்கில் நறுக்கி இதில் சேர்க்கவும். சின்ன வெங்காயத்தை ஒன்றும் பாதியுமாக நறுக்கி அதில் சேர்த்து வதக்கவும்.
- 4
வெங்காயம் நிறம் மாறிய பின் வேக வைத்த மட்டனை அதிலிருக்கும் தண்ணீருடன் மண்சட்டியில் சேர்க்கவும். இதில் இரண்டாம் பாலை சேர்த்து மூடி போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு உருளைக்கிழங்கு கலந்த முதல் பாலை சேர்த்து ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 5
தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பாலின் வாசம் மற்றும் சுவையுடன் கூடிய அருமையான மட்டன் ஸ்டியூ தயார். ஆப்பம் மற்றும் இடியாப்பத்துடன் சாப்பிட பொருத்தமாக இருக்கும். தேங்காய் பால் கலந்து இருப்பதனால் லேசாக இனிப்பு சுவையும் காரம் அதிகம் இல்லாமல் ஒரு வித்தியாசமான சுவையில் இருக்கும். இது சிறிது நீர்க்க இருந்தால் ஆப்பத்துடன் சாப்பிட பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரளா ஸ்டைல் கடலை கறி


அரியலூர் ஸ்பெஷல் மட்டன் குருமா


குருமா கேரளா ஸ்டைல்


சன்னா மசாலா


செட்டிநாடு மட்டன் குழம்பு


திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி


சன்னா மட்டன் சால்னா


மட்டன் குழம்பு(mutton curry recipe in tamil)


மட்டன் கறி


மட்டன் வறுவல் (கொங்கு ஸ்டைல்)


உருளைக்கிழங்கு வெள்ளை குருமா


பட்டு போல ஆப்பம்


படுரா கூட ஹோட்டல் ஸ்டைல் உருளை கிழங்கு மசாலா


காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)


மட்டன் பிரியாணி


பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு


மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton Heartbone Soup)


தேங்காய்பால் மட்டன் தம் பிரியாணி


எல்லாம் தேங்காய் மயம் புலவ்


செட்டிநாட்டு காளான் கிரேவி


கோதுமை சேவை பாயசம்


தேங்காய் பால் புலாவ் / நெய் புலாவ் (Thenkaai pulao recipe in tamil)


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி


புதினா சிக்கன் / க்ரீன் சிக்கன்


மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)


ஆப்பம் கேரளா ஸ்டைல் கடலைக்கறி


மட்டன் கோஃப்தா சால்னா


அவுல் சுண்டல் சாட் (tarri poha)


மட்டன் குருமா(mutton khurma recipe in tamil)

கமெண்ட்