தேவையான பொருட்கள்

  1. சுண்டல் கால் கிலோ
  2. தக்காளி கால் கிலோ
  3. பெரிய வெங்காயம் ஒன்று
  4. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  5. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  6. தனியாத்தூள் ஒரு டீஸ்பூன்
  7. கரம் மசாலா அரை டீஸ்பூன்
  8. ஏலக்காய் ஒன்று
  9. பட்டை ஒரு அங்குலம்
  10. கிராம்பு-2
  11. பிரிஞ்சி இலை ஒன்று
  12. கொத்தமல்லி இலை சிறிதளவு
  13. தேவையானஅளவு உப்பு
  14. ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சுண்டலை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 5 விசில் விட்டு இறக்கவும்

  2. 2

    தக்காளியை மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    நறுக்கியவெங்காயம் பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை இவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை இஞ்சி பூண்டு விழுது இவற்றை வதக்கி நறுக்கிய வெங்காயத்தையும் பொன்னிறமாக வதக்கவும்

  5. 5

    தக்காளி விழுதைச் சேர்த்து இதனுடன் உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்கி கொதிக்கவிடவும்

  6. 6

    பிறகு வேக வைத்த சுண்டல் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கும் சமயத்தில் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்

  7. 7

    சுவையான சென்னா மசாலா தயார். சப்பாத்தி பூரி இதனுடன் சேர்த்து பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes