எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3 பெரிய வெங்காயம்
  2. 3 தக்காளி
  3. 2 பச்சை மிளகாய்
  4. தேவையான அளவுஉப்பு
  5. 1 ஸ்பூன் மஞ்சள் தூள் தூள்,கொத்தமல்லி தூள்
  6. 2ஸ்புன் மிளகாய் தூள், கரம் மசாலா
  7. 1 ஸ்பூன் முட்டை கறி மசாலா தூள்
  8. 1 கைப்பிடி பொதினா, 1 கைப்பிடி கொத்தமல்லி தழை
  9. 6ஸ்புன் தேங்காய் துருவல், 5 முந்திரி பருப்பு
  10. 1 ஸ்பூன் சோம்பு, 1ஸ்புன் கசகசா, 3ஸ்புன் பொட்டுகடலை
  11. 3ஸ்புன் இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் அரிந்து கொள்ளவும். இஞ்சி, பூண்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸியில் பொட்டுகடலை, தேங்காய் துருவல், சோம்பு, முந்திரி, கசகசா எல்லாம் போட்டு நைசாக அரைக்கவும்.

  2. 2

    ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் 3கரண்டி ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். உப்பு சேர்க்கவும். பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். கொத்தமல்லி தழை போடவும். பொதினா தழை போடவும். வதக்கவும். சால்னா

  3. 3

    சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். 2ஸ்புன் முட்டை மாசலா தூள் சேர்த்து கொதிக்கவிடவும். தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். மிக்ஸியில் அரைத்த விழுதை போடவும். நன்றாக கொதிக்கவிடவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

  4. 4

    சுவையான சால்னா ரெடி. இட்லி, தோசைக்கு, புரோட்டாக்கு சூப்பர் சைடீஸ். திண்டுக்கல் சால்னா.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sundari Mani
Sundari Mani @cook_22634314
அன்று

Similar Recipes