சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், இஞ்சி,பூண்டு, பச்சை மிளகாய்,சேர்த்து கொரகொரப்பாக தண்ணீர் சேர்க்காமல்,அரைத்து வைத்துக் கொள்ளவும்,.....
- 2
முந்திரிப்பருப்பு,பிரிஞ்சி இலை,கிராம்பு,ஏலக்காய், பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி பூ சேர்த்து, பவுடராக அரைத்து வைத்துக் கொள்ளவும்,....
- 3
குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய்,நெய் ஊற்றி,அரைத்து வைத்த இஞ்சி,பூண்டு,வெங்காய பேஸ்ட்டை,சேர்த்து வதக்கி, பின் அரைத்து வைத்த மசாலா பவுடரையும், சேர்த்து எண்ணெயில் வதக்கவும்,......
- 4
நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை 10 நிமிடம் மூடி போட்டு, லேசாக தண்ணீர் சேர்த்து, வேகவிடவும்,....(இடையில் கிண்டி விடவும் அடிப்பிடிக்காமல்) அதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள்,சீரகத்தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து கலந்து விடவும்,....
- 5
ஒரு கைப்பிடி அளவு புதினா,கொத்தமல்லி இலை, சேர்த்து கலந்துவிடவும்,..... 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கிளறி,எண்ணெய் பிரிந்து வரும் வரை மூடி வைக்கவும்,....
- 6
பின் கழுவி சுத்தம் செய்த இறாலை,சேர்த்து மசாலாவுடன் கிளறவும்,....
- 7
ஒரு கப் அரிசிக்கு,ஒன்றரை கப் தண்ணீர் வீதம் சேர்த்து, தண்ணீர் கொதித்தவுடன் அரைமணி நேரம் ஊற வைத்த அரிசியை, சேர்த்துக் கொதிக்க விடவும்,....(உப்பு காரம் சரிபார்த்துக் கொள்ளவும்),....
- 8
பின் குக்கரை மூடி, மிதமான தீயில்,ஒரு விசில் விடவும்,....ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து,10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்,.....
- 9
விசில் அடங்கியவுடன் குக்கரைத் திறந்து, கரண்டியால் மெதுவாக கிளறி விடவும்,சுவையான தலப்பாக்கட்டி இறால் பிரியாணி தயார்,.......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
முட்டை பிரியாணி
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இறால் தலைப்பாகட்டு பிரியாணி
#nutrient1 #book உடலுக்கு தேவையான சத்துக்கள் கடல் உணவுகளில் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும் (Protein) மற்றும் வைட்டமின் “டி” (Vitamin D) அடங்கியுள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். புரதம், கால்சியம் (Calcium), பொட்டாசியம் (Potassium) மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். Dhanisha Uthayaraj -
தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்