தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 பேர்
  1. தேவையான அளவுபட்டை, கிராம்பு, ஏலக்காய், மராட்டி மொக்கு, அண்ணாச்சி பூ-
  2. 1/2 கிலோசிக்கன்-
  3. 2 ஆழாக்குபாஸ்மதி அரிசி-
  4. 3 டேபிள் ஸ்பூன்தயிர்-
  5. தேவையான அளவுபுதினா கொத்தமல்லித்தழை-
  6. 1 டேபிள்ஸ்பூன்மிளகாய்த்தூள் -
  7. 2 டேபிள் ஸ்பூன்மல்லித் தூள்-
  8. 1 டேபிள் ஸ்பூன்கரம் மசாலா -
  9. 2 டேபிள் ஸ்பூன்பிரியாணி மசாலா-
  10. தேவையான அளவுஇஞ்சி பூண்டு விழுது-
  11. தேவையான அளவுநெய் எண்ணெய் -
  12. 3 ஆழாக்குதண்ணீர்-
  13. ஒரு டேபிள்ஸ்பூன்மஞ்சள்தூள்-
  14. 2பச்சை மிளகாய்-
  15. 1/2எலுமிச்சை -

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    சுத்தப்படுத்திய சிக்கனுடன் சிறிதளவு உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தயிர் சேர்த்து கிளறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

  3. 3

    குக்கரில் எண்ணெய் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் மராட்டி மொக்கு அண்ணாச்சி பூ சேர்த்து அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    நன்கு வதங்கிய பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, பிரியாணி மசாலா,உப்பு அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    பின் ஊற வைத்துள்ள சிக்கனை அதனுடன் சேர்த்து புதினா கொத்தமல்லி தழை சேர்த்த பின் தயிர் சேர்த்து 5 நிமிடம் விடவும்..

  6. 6

    ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் என்ற விகிதத்தில் இரண்டு ஆளாக்கு அரிசிக்கு 3 ஆழாக்கு தண்ணீர் சேர்த்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பின் குக்கரை மூடி சிறிதளவு நெருப்பில் 5 முதல் 7 நிமிடம் வரை வைத்து அணைக்கவும்.

  7. 7

    இப்பொழுது தெருவே மணமணக்கும் சிக்கன் பிரியாணி தயாராகி விட்டது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

MuthulakshmiPrabu
MuthulakshmiPrabu @muthuprabu1416
அன்று

Similar Recipes