நாண் ரொட்டி

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒன்றரை மணி நேரம்
3 பேர்க்கு
  1. இரண்டு கப்மைதா
  2. இரண்டு ஸ்பூன்வெண்ணெய்
  3. ஒரு ஸ்பூன்ஈஸ்ட்
  4. இரண்டு ஸ்பூன்சர்க்கரை
  5. ஒரு ஸ்பூன்ரீபைண்டு ஆயில்

சமையல் குறிப்புகள்

ஒன்றரை மணி நேரம்
  1. 1

    கால் கப் இலேசான சூடான நீரில் சர்க்கரை கலக்கி அதில் ஈஸ்ட் சேர்த்து ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் மைதா சேர்த்து ஒரு ஸ்பூன் ஆயில் அரை ஸ்பூன் உப்பு ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.

  3. 3

    அதில் ஈஸ்ட் கலந்த நீரை ஊற்றி மேலும் சிறிது தண்ணீர் தெளித்து சற்று தளர்வாக பிசைந்து மேலே ஒரு ஸ்பூன் ஆயில் சேர்த்து ஒன்றரை மணி நேரம் ஊற விடவும்.

  4. 4

    ஒன்றரை மணி கழித்து ஊறிய மாவில் பெரிய எலுமிச்சை அளவு எடுத்து மாவு தூவி நீளவாக்கில் தேய்க்கவும்.

  5. 5

    அடுப்பில் தோசைக்கல் நன்கு சூடானதும்தேய்த்த ரொட்டி சேர்த்து குமிழ்கள் வரும் வரை சூடேற்றி வேக விட்டு புரட்டி போடவும்.

  6. 6

    இருபுறமும் வெந்ததும் கல்லில் இருந்து எடுத்து ஒரு புறம் சூடாக இருக்கும் போதே பட்டர் இலேசாக தடவி வைக்கவும்.

  7. 7

    சுவையான சாஃப்டான நாண் ரொட்டி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970
அன்று

Similar Recipes