🧄🧄கார்லிக்🧄🧄நாண்🥖🥖(garlic naan recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#GA4 #WEEK24

நாண் என்றாலே நம் நினைவுக்கு வருவது தாபாக்களில் செய்யப்படும் நாண் தான். அத்தகைய சுவைமிக்க உணவை நம் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.

🧄🧄கார்லிக்🧄🧄நாண்🥖🥖(garlic naan recipe in tamil)

#GA4 #WEEK24

நாண் என்றாலே நம் நினைவுக்கு வருவது தாபாக்களில் செய்யப்படும் நாண் தான். அத்தகைய சுவைமிக்க உணவை நம் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
4 நபர்கள்
  1. 2 கப் -மைதா மாவு
  2. 1/4 வெதுவெதுப்பான தண்ணீர்
  3. 1 தே.க - ஈஸ்ட்
  4. 1 தே.க - சர்க்கரை
  5. 1 மேஜைக்கரண்டி- எண்ணெய்
  6. தேவையானஅளவு - உப்பு
  7. 1 மேஜைக்கரண்டி - கொத்தமல்லி
  8. 1 தே.க - கருப்பு எள்ளு
  9. 6 பல் - பூண்டு
  10. 1 மேஜைக்கரண்டி - உருகிய வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    நாண் செய்வதற்கு முதலில் ஈஸ்டை உயிர்ப்பிக்க (ஆக்டிவேட்) செய்ய வேண்டும். அதற்கு ஒரு பாத்திரத்தில் வெதுவெதப்பான தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் (கை பொறுக்கும் சூட்டில் இருக்க வேண்டும்.) பிறகு அதில் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து 15 நிமிடங்கள் மூடி வைத்து விடவும்.

  2. 2

    சிறிது நேரத்தில் நுரை போன்று படிந்து ஈஸ்ட் தயாராக இருக்கும்.

  3. 3

    மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, எண்ணெய், உப்பு, ஈஸ்ட் கலவை சேர்த்து பிசையவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக அழுத்தி பிசையவும். முதலில் கையில் ஓட்டுவது போல் இருக்கும் 10 நிமிடங்கள் தொடர்ந்து பிசைந்தால் மிருதுவாக ஆகிவிடும்.

  4. 4

    பிசைந்த மாவின் மேல் சிறிதளவு எண்ணை பூசி ஒரு துணி வைத்து மாவு இரட்டிப்பு ஆகும்வரை மூடி வைக்கவும்.(குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஆகும்)

  5. 5

    இரட்டிப்பான மாவை நன்றாக கைகளால் பிசையவும் காற்று வெளியேற செய்வதற்காக.பிறகு அதிலிருந்து சிறிதளவு மாவை எடுத்து உருட்டவும்.

  6. 6

    முட்டை வடிவில் உருட்டிய நாண் இல் சிறிதளவு எள்ளு, கொத்தமல்லி தழை,பூண்டு மற்றும் வெண்ணை கலவையை தடவி கொள்ளவும். பிறகு அதை பின்புறமாக திருப்பி தண்ணீர் தடவி கொள்ளவும்.

  7. 7

    தயார் செய்த நாணை தோசைக்கல்லில் போடவும் மேல்புறம் சிறிது சிறிதாக மேலெழும்பி வந்தவுடன் தோசைக்கல்லை அப்படியே திருப்பி தீயில் காட்டவும்.

    (பின்புறத்தில் தண்ணீர் தொட்டு வைத்திருப்பதால் கீழே விழாது) முன்புறமும் நன்றாக சிவந்து வந்ததும் அடுப்பை அணைத்து பரிமாறவும்.

    (நான்ஸ்டிக் தோசை கல்லாக இருந்தால் சுலபமாக செய்ய முடியும் அப்படி இல்லை எனில் தயார் செய்த நாணை நேரடியாக தீயில் காட்டவும் அல்லது தோசை கல்லில் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைக்கவும்.)

  8. 8

    சுட சுட தாபா ஸ்டைல் 🧄🥖கார்லிக் நாண் 🧄🥖 சென்னா மசாலாவுடன் சுவைக்க தயார்.😋😋😋😋😋

  9. 9

    இதனுடன் சிக்கன் கிரேவி, பன்னீர் பட்டர் மசாலா, சென்னா மசாலா அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும்😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes