#vattaram சொதிகுழம்பு

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#vattaram சொதிகுழம்பு

#vattaram சொதிகுழம்பு

#vattaram சொதிகுழம்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. ஒரு கைப்பிடி அளவுகேரட், பீன்ஸ், உருளை தலா
  2. கால் டீஸ்பூன்கடுகு
  3. 1 டீஸ்பூன்கடலை எண்ணெய்
  4. சிறிதளவுகருவேப்பிலை
  5. சிறிதளவுகொத்தமல்லி
  6. 1பெரிய வெங்காயம்
  7. 2 டீஸ்பூன்பாசிப்பருப்பு
  8. ஒரு கப்தேங்காய்
  9. 3பச்சைமிளகாய்
  10. ஒரு துண்டுஇஞ்சி

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கேரட், பீன்ஸ், உருளை போன்றவற்றை கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து வேகவைக்கவும்

  2. 2

    குக்கரில் பாசிப்பருப்பை தண்ணீர் விட்டு வேக வைத்து கொள்ளவும்

  3. 3

    பச்சைமிளகாய் இஞ்சியை விழுதாக அரைத்து கொள்ளவும்

  4. 4

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  5. 5

    பின்னர் அதில் பச்சைமிளகாய் விழுதை சேர்த்து வதக்கி வேகவைத்த காயுடன் சேர்க்கவும்

  6. 6

    வேகவைத்த பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்

  7. 7

    தேங்காயை துருவி முக்கால் கப் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்

  8. 8

    தேங்காய்பால் குழம்புடன் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes