சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், தனியா சேர்த்து கொரகொரப்பாக அரைத்து பின் தக்காளி, புளி சேர்த்து அரைக்கவும்
- 2
பூண்டை தட்டி வைக்கவும்
- 3
வாணலியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து அரைத்த விழுது, தட்டி வைத்த பூண்டு சேர்த்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். தகதக தக்காளி ரசம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது Muniswari G -
செட்டிநாடு ரசம். #refresh1
செட்டிநாட்டில் இந்த ரசம் மிகவும் பிரபலம்.தாளிக்கும் போது மிளகாய் வற்றலும்,பெருங்காயத் தூளும் போடுவதில்லை.கொத்தமல்லிதழைதான் பயன்படுத்துகின்றார்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.உ.பருப்பை வறுத்து செய்வதால் எலும்புகளுக்கு தேவையான வலுவை கொடுக்கும்.இதில் சேர்க்கப்பட்டிருக்கும் தனியா,மிளகு,சீரகம் உடலுக்கு நலத்தைக் கொடுக்கக் கூடியதாகும். Jegadhambal N -
-
தக்காளி மிளகு ரசம்
#refresh1கொரோனாவில் முதன்மை அறிகுறிகளில் ஒன்றான தொண்டைப் புண், சளி ஆகியவற்றைச் சரிசெய்வதில் மிளகிற்கு நிகர் எதுவுமில்லை. அதனோடு பூண்டு சேர்த்துக்கொண்டால் நிச்சயம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். muthu meena -
-
-
-
ஆனியன் ரசம்
#refresh2 வெங்காயத்துடன் அதில் அரைத்துப் போடும் பொடி தான் இந்த ரசத்துக்கே ஹைலைட். இதில் சேர்த்திருக்கும் மிளகு,சீரகம்,பூண்டு நமக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். Jegadhambal N -
தக்காளி மிளகு ரசம்🍅🍅☘️☘️👌👌
#refresh1அருமையான ருசியான புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய தக்காளி ரசம் செய்ய முதலில் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் கொத்துமல்லி, சீரகம், மிளகு, கறிவேப்பிலை,வரமிளகாய், பூண்டு பற்கள், தக்காளி, அனைத்தையும் ஒன்றாக பச்சையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு,சிறிய பெருங்காயம் கட்டி, கறிவேப்பிலை,போட்டு பொறிய விட வேண்டும்.பின் அரைத்து வைத்த தக்காளி கலவையை கடாயில் ஊற்றி எண்ணெயில் ஒரு வதக்கு வதக்கி விட வேண்டும். பின் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை அதனுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். அதனுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தக்காளி ரசம் நுரை கட்டும் வரை அடுப்பில் விடவும். நுரை கட்டியவுடன் கொத்துமல்லி இலைகளை தூவி இறக்க வேண்டும். நமது தக்காளி ரசம் தயார்👍👍 Bhanu Vasu -
-
-
மிளகு ரசம்
#pepper #Pepper rasam in tamil👇👇👇👇https://youtu.be/PcnJsc0NCmEHow to make a simple and tasty melagu rasam??SUBSCRIBE 🔔 LIKE 👍 COMMENT 📃 Tamil Masala Dabba -
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
*மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)
குளிர் காலத்திற்கு ஏற்ற ரெசிபி. இருமல், சளி, ஜலதோஷம்,ஆகியவற்றை உடனடியாக குணமாக்கக் கூடியது இந்த ரசம்.செய்வது சுலபம். Jegadhambal N -
மண்சட்டி மிளகு தக்காளி ரசம்
#refresh1ரசம் பொதுவாக உடலுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் மிளகு பூண்டு சீரகம் ஆகியவை சேர்க்கப்படும். குறிப்பாக ரசப்பொடி பிரேஷ் ஆக தயாரித்து ரசம் செய்யும் பொழுது ரசத்தின் மனமும் சத்தும் கூடும். மண் சட்டி, கல் பாத்திரம் அல்லது ஈயப் பாத்திரத்தில் ரசம் வைத்தால் தனி சுவையாக இருக்கும். Asma Parveen -
-
-
*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், பூண்டு ரசம்*(restaurant style garlic rasam recipe in tamil)
பூண்டு இதய நோய் வராமல் தடுக்கின்றது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கின்றது. எலும்புகளை பலமாக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
கொள்ளு ரசம் (Horse gram Rasam)
#refresh1ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய கொள்ளை ரசமாக வைத்து வாரத்தில் மூன்று அல்லது 4 நாட்கள் சாப்பிட்டு வரலாம். Nalini Shanmugam -
கொள்ளு தக்காளி ரசம் (Kollu thakkaali rasam recipe in tamil)
#goldenapron3#sambarrasam Aishwarya Veerakesari -
-
பச்சைபயிர் மிளகு ரசம்🥗
#refresh1 புத்துணர்ச்சி ஊட்டும் அருமையான பச்சை பயிர் மிளகு ரசம் செய்ய முதலில் தேவையான அளவு பச்சை பயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அடுப்பில் 15 நிமிடம் வேகவைத்து அதனுடன் 1 தக்காளி சேர்த்து வெந்தவுடன் பச்சைப் பயிர் தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து , அதனுடன் ஒரு பச்சைத் தக்காளி கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் பின் மிளகு, சீரகம், கொத்தமல்லி, பூண்டு, கறிவேப்பிலை, வரமிளகாய், அனைத்தையும் கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதை மிக்ஸியில் ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, சிறிய பெருங்காயம் கட்டி, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் கரைத்து எடுத்து வைத்துள்ள புளி தக்காளி கலவையை கடாயில் ஊற்றவும். பின் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி ,மிளகு கலவைகளை அதனுடன் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கவும்.👍👍 சூப்பரான பச்சைப் பயிறு மிளகு ரசம் தயார்👌👌👌👌 Bhanu Vasu -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14981667
கமெண்ட்