ரேசன் பச்சரிசி சாஃப்ட் இடியாப்பம்

#combo3
ரேஷன் பச்சரிசியில் சூப்பராக இடியாப்ப மாவு தயாரித்து இடியாப்பம் செய்யலாம். மாவு அரைப்பது முதல் இடியாப்பம் செய்வது வரை அனைத்து செய்முறையும் பகிர்ந்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
ரேஷனில் கிடைக்கக்கூடிய பச்சரிசியில் மாவு பச்சரிசி வெண்மையாக இருக்கும். இந்த மாதிரியான பச்சரிசியை கருப்பு அரிசி இல்லாமல் சுத்தம் செய்து தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். தண்ணீர் சுத்தமாகும் வரை கழுவிக் கொள்ளவும். இதனை வடித்து கொள்ளவும். சூடான வெயிலில் காட்டன் துணியின் மேல் பச்சரிசியை பரப்பி நன்றாக காய வைக்கவும். காய்ந்த அரிசியை மாவு மில்லில் கொடுத்து இடியாப்ப பதத்திற்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை வட சட்டியில் சேர்த்து வறுத்து ஆற வைக்கவும். நிறம் மாறாமல் லேசாக வறுக்க வேண்டும்.
- 2
தயார் செய்த மாவில் இருந்து ஒன்றரை கப் மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும் இதில் உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். தண்ணீரை படத்தில் காட்டியுள்ளபடி இலேசாக கொதித்து வந்த நிலையில் மாவில் சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும். மாவை நன்கு உள்ளங் கைகளால் பிசைந்து ஒன்று திரட்டி உருட்டிக் கொள்ள வேண்டும். கிளறிய மாவை கொழுக்கட்டை போல் பிடித்து வைக்கவும். இடியாப்ப அச்சில் எண்ணெய் தடவி மாவை வைக்கவும்.
- 3
எண்ணை தடவிய இடியாப்ப தட்டு அல்லது இட்லி தட்டில் இடியாப்பத்தை பிழிந்து விடவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்தபின் இடியாப்ப ஸ்டாண்டை வைத்து மூடி போட்டு சரியாக ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.
- 4
சூப்பரான பஞ்சு போன்ற இடியாப்பம் உதிரி உதிரியாக இருக்கும். இதனை தேங்காய் பால், கறி குழம்பு, ஆட்டுக்கால் சூப், அல்லது ஆட்டுக்கால் பாயா வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
- 5
குறிப்பு: தண்ணீரின் அளவு ஒரு சிலரின் அரிசி மற்றும் மாவின் தன்மையைப் பொறுத்து மாறுபடலாம்.
Top Search in
எழுதியவர்
Similar Recipes
-
கருப்பட்டி இடியாப்பம்- தேங்காய்ப்பூ
#combo3உடலுக்கு ஆரோக்கியமான கருப்பட்டி இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.MuthulakshmiPrabu
-
-
-
-
-
-
-
-
கம்பு மாவு இடியாப்பம்
#காலைஉணவுகள்கம்பு சிறு தானியங்களில் ஒன்று. ஊட்டச்சத்து மிக்கது. கம்பை சுத்தம் செய்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் தேவையான போது இடியாப்பம் செய்யலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கம்பு மாவு இடியாப்பத்தை விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
-
-
-
-
பச்சரிசி சேவை (Pacharisi sevai recipe in tamil)
#GA4 #steamed#week8 சிறிய குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு Siva Sankari -
-
மிருதுவான"இடியாப்பம் &ரெஸ்டாரண்ட் ஸ்டைல் வெஜிடேபிள் பாயா"#Combo3
#Combo3#மிருதுவான "இடியாப்பம்" & ரெஸ்டாரண்ட் ஸ்டைல் "வெஜிடேபிள் பாயா". Jenees Arshad -
-
சத்து மாவு இடியாப்பம் (Sathu maavu idiappam recipe in tamil)
சத்து மாவு இடியாப்பம், குழந்தைளுக்கு அடிக்கடி செய்வது உண்டு.#GA4#week8#steamed Santhi Murukan -
காலை உணவு இடியாப்பம் தக்காளி இடியாப்பம் புளிக்காய்ச்சல் இடியாப்பம்
மாவு உப்பு நல்லெண்ணெய் ஊற்றி வென்னீர் கலந்து பிசையவும். இடியாப்பம் பிழியவும். மல்லி, மிளகு, எள்,க.பருப்பு,வ.மிளகாய்2,வெந்தயம்போட்டு வறுத்து தூளாக்கி பின் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி பெருங்காயம் கடுகு உளுந்து வறுத்து புளித்தண்ணீர் கெட்டியாக ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவும் தூள் 2ஸ்பூன் போட்டு வறுத்த கடலை போடவும்.இதில் இடியாப்பம் பிரட்டி வைக்கவும். புளிக்காய்ச்சல் இடியாப்பம் தயார். கடுகு,உளுந்து, வரமிளகாய், ப.மிளகாய், பெரூங்காயம்,கறிவேப்பிலை தேங்காய் எண்ணெய் விட்டு கடாயில் வறுத்து தக்காளி வெங்காயம் தேவையான உப்பு போட்டு வதக்கவும். பின் இடியாப்பம் போட்டு கிண்டவும்.தேங்காய் துறுவல் போடவும். தக்காளி இடியாப்பம் தயார் ஒSubbulakshmi -
பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா
#combo3இடியாப்பம் மற்றும் ஆபத்திற்கு ஏற்ற பொருத்தமான ஆட்டுக்கால் பாயா செய்முறை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
ரவா இடியாப்பம்(rava idiyappam reipe in tamil)
#made1ரவா இடியாப்பம், ரவையை வைத்து செய்தது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு,அரிசி மாவு இடியாப்பம் போல் சாப்ட் ஆகவும்,சுவையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
இடியாப்பம் பசும்பால்
#everyday3 பொதுவாகவே இரவு நேரத்தில் எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளை எடுத்துக் கொள்வது நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம் இவைகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதிலும் இடியாப்பத்துடன் பசும்பால் சேர்த்து சாப்பிடும் பொழுது எளிதில் ஜீரணமும் ஆகும் அதே சமயம் பால் சேர்த்து இருப்பதால் நல்ல உறக்கமும் வரும் Laxmi Kailash -
-
இடியாப்பம்&தேங்காய் பால் (String hopper & Coconut milk)
#Combo3இடியாப்பம் தேங்காய் பால் மிகவும் சுவையான பொருத்தமான காலை அல்லது மாலை நேர சிற்றுண்டி.செய்வது கொஞ்சம் கஷ்டம்.ஆனால் சுவை நிறைந்த உணவு. Renukabala -
கேரட் ஸ்வீட் இடியாப்பம்#carrot #book
மாத்தியோசி இடியாப்பம் மாவுடன் கேரட், கலர்ஃபுல் கேரட் இடியாப்பம். Hema Sengottuvelu -
-
எளிமையான உணவு - இடியாப்பம்
#combo #combo3இடியாப்பம் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த உணவாகும். ஆவியில் வெந்த உணவு என்பது எளிதில் செரிமானம் ஆகிவிடும்.குறிப்பு : இடியாப்ப கட்டையில் இறுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் மாவை சிறு கொழுக்கட்டைகளாக உருண்டி வைக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர் Sai's அறிவோம் வாருங்கள்
கமெண்ட்