கன்னியாகுமாரி ஸ்பெஷல் இனிப்பு அவல் ரெசிபி

Sowmya
Sowmya @vishalakshi

#vattaram
Week4
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஊட்டச்சத்துகள் நிறைந்த‌ உணவு என்றால் அவல் தான் முதல் இடத்தைப் பிடிக்கும்... அதிலும் சிகப்பு அவல் என்றால் இன்னும் சத்துக்கள் ஏராளம் .....தீட்டப்படாத‌ அரிசியில் இருந்து அவல் உருவாக்கப்படுவதால் இதில் அதிக‌ சத்துக்கள் இருக்கின்றன....‌

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  1. 100 கிராம் அவல்
  2. 50 கிராம் வெல்லம்
  3. 5 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
  4. 1 டேபிள் ஸ்பூன் நெய்
  5. 4 முந்திரிப்பருப்பு
  6. தேவையானஅளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் அவலை எடுத்து சுத்தம் செய்து அலசி விட்டு பிறகு அவல் முழுகும் வரை தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும்

  2. 2

    15 நிமிடம் கழித்து நன்றாக அவல் ஊறி இருக்கும். அதனை வடிதட்டு வைத்து தண்ணீர் முழுவதையும் வடித்து விட வேண்டும்

  3. 3

    வெல்லதை பாகாக காய்ச்ச வேண்டும். அதற்கு ஒரு கடாயில் வெல்லத்தை சேர்த்து அதனுடன் 5 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்...

  4. 4

    வெல்லம் முழுவதும் நன்றாக கரைந்து பாகாக மாறும் வரை காத்திருக்கவும்

  5. 5

    வெல்லப் பாகு தயாரானதும் அதில் நாம் வைத்திருக்கும் அவலை சேர்க்க வேண்டும்

  6. 6

    பிறகு நாம் வைத்திருக்கும் தேங்காய் துருவலையும் சேர்க்க வேண்டும்

  7. 7

    அவலை இன்னும் ருசியாக மாற்ற ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் 4 முந்திரிப்பருப்பை வறுத்து‌ எடுத்து அதையும் அவல் கலவையில் சேர்க்க வேண்டும்

  8. 8

    அனைத்தையும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கலக்க வேண்டும்

  9. 9

    இதோ மிகவும் சுலபமாக செய்ய கூடிய ஆரோக்யமான சத்துக்கள் நிறைந்த இனிப்பு அவல் ரெசிபி தயார்.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sowmya
Sowmya @vishalakshi
அன்று

Similar Recipes