கோவில் வெண்பொங்கல்

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

கோவில் வெண்பொங்கல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 150 கிராம் பச்சரிசி
  2. 50 கிராம் பாசிப்பருப்பு
  3. 10 முந்திரி
  4. ஒரு ஸ்பூன் சீரகம்
  5. அரை ஸ்பூன் மிளகு
  6. நாலு ஸ்பூன் நெய்
  7. ஒரு குழிக்கரண்டி சமையல் எண்ணெய்
  8. சிறியதுண்டு இஞ்சி
  9. ஒரு பச்சை மிளகாய்
  10. ஒரு கொத்து கறிவேப்பிலை
  11. தேவையானஉப்பு
  12. தேவையானதண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் நன்கு கழுவி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி (குக்கரில் வேக வைக்கும்போது 1/2 டம்ளர் தண்ணீர் extra வாக வைக்க வேண்டும்)வைக்கவும்

  2. 2

    அடுப்பில் கடாயை வைத்து ஒரு குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் நெய் விட்டு சீரகம் மிளகு கருவேப்பிலை தாளித்து பச்சை மிளகாய் கீறி போட்டு இஞ்சியை துருவி சேர்த்து அரிசி பருப்பு கலவையில் கொட்டி கிளறிவிடவும்

  3. 3

    குக்கரை மூடி 4 விசில் விட்டு 5 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும் விசில் அடங்கியதும் மூடியை திறந்து பொங்கலை நன்றாக மசித்து விடவும்

  4. 4

    அடுப்பில் கடாயை வைத்து 3 ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுத்து வேக வைத்த வெண்பொங்கலில் போட்டு நன்றாக கிளறி விடவும் கோவில் வெண் பொங்கல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes